Show all

அரசாங்கத்தை இப்படியெல்லாம் கூடவா ஏமாற்றுவார்கள்! கடந்த 30 ஆண்டுகளாக 3 அரசு வேலைகளில் சம்பளம் வாங்கிய ஒருவர்

பீகார் அரசாங்கத்தில், ஒரு மனிதர் கடந்த 30 ஆண்டு காலமாக 3 அரசு வேலைகளை ஒரே நேரத்தில் பார்த்து சம்பளமும் வாங்கிக் கொண்டே வந்திருக்கிறார். அவர் பெயர் சுரேஷ் ராம்.

07,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரு மனிதர் கடந்த 30 ஆண்டு காலமாக 3 அரசு வேலைகளை ஒரே நேரத்தில் பார்த்து சம்பளமும் வாங்கிக் கொண்டே வந்திருக்கிறார். அவர் பெயர் சுரேஷ் ராம். இந்த துணிச்சலான சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர் பீகார் மாநிலத்தில் மூன்று வெவ்வேறு அரசுத்துறைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம்

அண்;மையில் இந்திய நிதி அமைச்சகம் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறையை கொண்டு வந்த போது ஒரே நபர் மூன்று வெவ்வேறு அரசுத் துறைகளில் வேலை பார்த்துக் கொண்டே சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது

எனவே அரசுத் துறையினர் சம்பந்தப்பட்ட சுரேஷ் ராமை தகுந்த ஆதாரங்களுடனும் ஆவணங்களுடனும் வந்து சந்திக்கச் சொல்லி இருக்கிறார்கள் .ஆனால் சுரேஷ் ராமோ வெறும் வருமானவரித்துறை அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் அரசு அதிகாரிகளை சந்தித்து இருக்கிறார். அரசு அதிகாரிகளோ அரசுப் பணியில் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வருமாறு திருப்பி அனுப்பி இருக்கிறார்கள் அதன் பின் சுரேஷ் ராம் ஆளைக் காணவில்லை

ஒரே பெயர் கொண்ட நபர்கள் அரசின் பல்வேறு துறைகளில் வேலை செய்வது இயல்பானதுதான். ஆனால் ஒரே பெயர் ஒரே பிறந்த தேதி ஒரே முகவரி என அனைத்தும் ஒன்றாக இருந்ததால் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி மேலாண்மை அமைப்பு இவரை தனியாக வட்டம் போட்டு காட்டி இருக்கிறது

பீகார் மாநிலத்தின் இணைச் செயலர் சந்திரசேகர் பிரசாத் சிங் இவரை பணிநீக்கம் செய்யச் சொல்லி இருக்கிறார் அதோடு இவர் பெயரில் முதல் தகவல் அறிக்கையையும் தயார் செய்யச் சொல்லி இருக்கிறாராம்

இந்த சுரேஷ் ராம் கட்டுமானத் துறையில் உதவி பொறியாளர் ஆகவும், நீர் மேலாண்மை துறையில் பங்கா எனும் மாவட்டத்தில் ஒரு அரசு அதிகாரியாகவும், பீம் நகர்ப் பகுதியில் அதே நீர் மேலாண்மை துறையில் அரசு அதிகாரியாகவும் கடந்த 30 ஆண்டுகளாக வேலைபார்த்து சம்பளம் வாங்கி பதவி உயர்வுகளும் கூட வாங்கி இருக்கிறாராம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,254.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.