Show all

எப்படிக் கிடைக்கிறார்கள் இது போன்ற ஆட்கள் பிக்பாசுக்கு! முன்பு ஜுலி தற்போது லாஸ்லியா: கொந்தளிக்கும் தமிழ்ஆர்வலர்கள்

தமிழர் என்ற பெருமிதத்தைத் தூண்டும் வகையாக, பெரிய பீடிகையோடு பிக்பாஸ் பருவம் ஒன்றில் கொண்டு வரப்பட்டவர் ஜுலி. அதே போல ஈழத்தமிழ்ப் பெண் என்று பெரிய பீடிகையோடு பிக்பாஸ் பருவம் மூன்றில் கொண்டு வரப்பட்டவர்தான் லாஸ்லியா இருவரும் சோடை போகிறார்கள். உண்மையான வீரமங்கையாக உலா வந்த மதுமிதா உடனே வெளியேற்றப் படுகிறார். பிக்பாசின் நோக்கம்தான் என்ன? தமிழர் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துவதா? தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிக்கிறார்கள். 

08,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சல்லிக்கட்டு வீரமங்கை ஜுலி! இப்படித்தான் போட்டியாளர் ஜுலிக்கு அறிமுகம் கொடுக்கப் பட்டது. ஜுலியும் தலையில் சிவப்பு தலைபாகையைக் கட்டிக் கொண்டு வந்து தமிழ் ஆர்வலர்களைப் புல்லரிக்கச் செய்தார். அப்புறம் பார்த்தால் அவருக்கு வழங்கப் பட்ட ஒரு வேலைப்போட்டியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் தாயுமானவர் என்று கூறி தான் ஒரு வெத்து வேட்டு என்று நிரூபனம் செய்தார். 

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் காட்டப்படும் தமிழீழத்தை நம் கண் முன்னே கொண்டு வருவது போல, ஈழத்தமிழ்ப் பெண் என்று பெரிய அறிமுகம் கொடுத்து லாஸ்லியா என்ற போட்டியாளரை பிக்பாஸ் பருவம் மூன்றில் நமக்கு அறிமுகம் கொடுத்தார்கள். தொடக்கத்தில் சேரப்பா, சேரப்பா என்று பிக்பாஸ் வீட்டில் உலா வந்ததைத் தவிர வேறு எந்த சிறப்பையும் முன்னெடுக்காத லாஸ்லியா:  

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் சேர்ந்து கொண்டு இருவரும் ஒலிவாங்கியை முடக்கி விட்டு கமுக்கமாக பேசி கமல்ஹாசனின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். இன்று வாக்குமூல அறைக்கு லாஸ்லியாவை வரவழைத்து பிக்பாஸ் என்பது ஒரு போட்டித்தளம் என்றும், இதனை சுற்றுலாத்தளமாக மாற்றிவிட வேண்டாம் என்றும் கண்டித்ததாகவும் தெரிய வருகிறது.

கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் வேலைப்போட்டி உட்பட எதிலும் கவனம் செலுத்தாமல் காதலில் முழ்கி வருகின்றனர். இதனை பெயர் குறிப்பிடாமல் கூறிய கமல், ‘பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு போட்டியாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் சுற்றுலாத்தலமாக மாற்றிவிட வேண்டாம் என்றும், இந்த வீட்டிற்கு வரும்போது உங்களுக்கு எப்படி யாரையும் தெரியாதோ, அதை அப்படியே கடைபிடித்து போட்டியில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு செயல்படுங்கள் என்று கூறினார் என்றும் தெரியவருகிறது.

பெரிய பீடிகையெல்லாம் இல்லாமல் நடிகையாக உள்ளே வந்த மதமிதா ஆடை அடையாளம் என்பது கலாச்சாரத்தின் முதன்மைக்கூறு. பிக்பாஸ் பெண் போட்டியாளர்களின் ஆடை அடையாளம் தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளது. இது தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப் படுகிற நிகழ்ச்சிதானே? என்று மதுமிதாவின் ஆதங்கம் முன்வைக்கப்பட்டது. மதுமிதாவின் அந்தத் தமிழ்க் கலாச்சாரம் சார்ந்த இயல்பை கொச்சைப் படுத்தினார்கள் (நடிகைதானே இவர் என்று) போட்டியாளர்கள் அனைவரும்.

ஆனாலும் மதுமிதா தொடர்ந்து தமிழர் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவே, தண்ணீர் தரமறுக்கும் கர்நாடத்தை கண்டித்தலை ஹலோ செயலிக்கான வேலைப்போட்டியாக முன்னெடுத்திருக்கிறார். சக போட்டியாளர்களால் அசிங்கப் படுத்தப் பட்டு, பிக்பாசாலும் வெளியேற்றப் பட்டிருக்கிறார். பிக்பாசின் நோக்கம்தான் என்ன? தமிழர் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துவதா? தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,255.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.