24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, எச்.வசந்த குமார் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பிற முதன்மை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், கருத்துப்பரப்புதல் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, இந்தியத் தலைமை அமைச்சர் மோடி தலைமையிலான ஆட்சியில் ராணுவ கோப்புகளே காணாமல் போய் உள்ளதாக கூறப்படுகிறது. இதேநிலை தொடர்ந்தால் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நியாயந்தானே! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,085.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.