24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விரைவில் நடிகர் சிம்பு வீட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. டி.ராஜேந்தருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் சிம்பு, இளையவர் குறளரசன். வரும் 13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (26.04.2019) அன்று சிம்புவின் தம்பி குறளரசனுக்கு எளிமையாக வீட்டில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளது. அண்;மையில்தான் குறளரசன் இஸ்லாமிய மதத்துக்கு மாறினார். அவர் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் தனது காதலிக்காகத்தான் மதம் மாறியதாக கூறப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,085.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.