21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசு கார்ப்பரேட்டுகளின் பினாமி அரசோ என்று அச்சப்படும் அளவிற்கு, கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே நிறைய வாய்ப்புகள் வழங்கப் பட்டிருந்த, நிதியமைச்சர் அருண்ஜெட்லி பதிகை செய்த வரவு-செலவு அறிக்கைக்கு இணைத்தில் 24 மதிப்பெண்களுக்கு மேல் யாரும் வழங்காத நிலையில், அவருடைய மனைவி சங்கீதா ஜெட்லி 10- க்கு 9 மதிப்பெண் கொடுத்து அசத்தியிருக்கிறார். மனித பிழை இருப்பதால் முழு மதிப்பெண் கொடுக்கவில்லை என்று சங்கீதா ஜெட்லி கூறியுள்ளார். அருண்ஜெட்லியின் அறிவிப்புகளை எதிர்பார்த்து நாட்டு மக்களே காத்திருந்து ஏமாந்து போனது அவருடைய குடும்பத்தாருக்;கு எந்த குற்ற உணர்ச்சியும் எழுப்பியதாகத் தெரியவில்லை. அவர்கள் சொந்த வீட்டுத் திருமணத்தை நடத்துவது போல, அருண் ஜெட்லியின் மனைவி சங்கீதா ஜெட்லி, மகன் ரோகன் ஜெட்லி, அருண் ஜெட்லியின் சகோதரி மது பார்கவா உள்ளிட்டோர் குடும்பமே புடைசூழ வந்திருந்து அருண்ஜெட்லியின் உப்பு சப்பில்லாத ஹிந்தியிலும். ஆஙகிலத்திலும் சொப்பிய வரவு-செலவைக் கேட்டு மக்கள் குமுறிய அதே வேளையில் மகிழ்ந்தனர். வரவு-செலவு பதிகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கீதா ஜெட்லி, தன்னுடைய கணவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளிப்பதாக தெரிவித்தார். வரவு-செலவு காங்கிரஸ் குறை கூறியிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு எதிர்க்கட்சிகளின் வேலையே குற்றங்களை கண்டுபிடிப்பது தான் என்றார். இதனைத் தொடர்ந்து, வரவு-செலவுக்கு ஜெட்லியின் சகோதரி மது பார்கவா 10-க்கு 10 மதிப்பெண் அளிப்பதாக தெரிவித்தார். வரவு-செலவு அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளதாக பார்கவா கூறினார். இதே போன்று அருண்ஜெட்லியின் மகனும் தந்தையின் வரவு-செலவுக்கு முதல் பத்து மதிப்பெண்; கொடுத்துள்ளார். ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி இது எதிர்காலத்துக்கான சிறந்த வரவு-செலவு என்று கூறினார். நாட்டு மக்களோ சரி!சரி! கடைசி வரவு-செலவுதானே போங்க போங்க என்கின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,687
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



