Show all

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் மின் விசிறியில் பிணமாகத் தொங்கிய சம்பவம்

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் ஒருவர் மின் விசிறியில் பிணமாகத் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் துஷ்யந்த். இவர் உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

 

தெற்கு டெல்லியில் உள்ள பெர்சராய் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி படித்து வந்தார்.

 

இந்நிலையில், துஷ்யந்த் அவரது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

 

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

 

மாணவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாரேனும் அவரை தூக்கில் தொங்கவிட்டனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.