ஜேஇஇ பொறியியல் நுழைவு முதன்மைத் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. 24 பேர்கள் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அந்த மாணவர்களில் தமிழக மாணவர்கள் யாரும் இல்லை. 27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 24 மாணவர்கள் 100விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழக மாணவர்கள் யாரும் 100விழுக்காடு மதிப்பெண் பெறவில்லை. நடுவண் உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவை மாணவர்கள் https://jeemain.nta.nic.in/webinfo/public/home.aspx என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 25 இந்தியத் தொழில்நுட்பக் கழக கல்லூரிகள், 31 தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் ஒன்றிய அரசின் உதவியுடனான 28 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேருவதற்காக ஜேஇஇ தேர்வு நடத்தப்படுகின்றது. நாடு முழுவதும் 11.74 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 10.23 லட்சம் பேர் (74விழுக்காட்டு மாணவர்கள்) மட்டுமே தேர்வுகளை எழுதியிருந்தனர். இந்த நிலையில் தேர்வுகள் நிறைவடைந்த ஆறாவது நாளான நேற்று நள்ளிரவில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களில் கவுரவ் ஆர். கோச்சர் என்ற மாணவர் 99.99விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவியரில் நிரூபமா என்ற பெண் 99.92மூ மதிப்பண் பெற்றுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



