26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை கோயிலுக்குள் அனைத்து அகவைப் பெண்களும் நுழைய அனுமதி வழங்கி உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கான எதிர்ப்பை பல்வேறு கோணங்களில் பந்தளம் அரச குடும்பத்தினர் காட்டி வருகின்றனர். பந்தளம் அரச குடும்பத்தினர், கேரளப் பெண்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் மற்றும் பேரணி நடத்தினர். அடுத்த கட்டமாக சபரிமலை கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி வழங்கியதைக் கண்டித்து, கேரள தலைமை செயலகம் வாசல் அருகே, பந்தளம் அரசு குடும்பத்தினர உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களையும், பொதுமக்களையும் கொத்தடிமைகளாக வைத்திருந்த எந்த ஆதிக்க வர்க்கத்தினருக்கும், பெண்களுக்கும், காலங்காலமாக பாகுபடுத்த பட்ட மக்களுக்கும் எந்த வகையான தீர்வு கிடைத்தாலும், அந்த ஆதிக்க வர்க்கத்தினரின் பல்லிடுக்குகளில் ஒட்டிக் கொண்ட அதிக்க சுவைக்காக, மீண்டும் ஆதிக்க அடக்கு முறைக்கு ஏங்கித் தவிப்பிதை பொருட்படுத்த வேண்டியதில்லை பிரணயி விஜயன் போன்ற பொதுவுடைமை சித்தாந்தவாதிகள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,938.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.