Show all

உண்மையன்று! உலகமெங்கும், நாளை தொட்டு 48மணி நேரம், இணைய சேவைகள் முடங்கும் என்பது

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சமூக வலைதளங்களில் வரும் 48 மணி நேரங்களுக்கு இணைய தளம் முடக்கப்படும் என்ற தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது உண்மையா பொய்யா என்ற குழப்பமான மனநிலை அனைவரிடமும் நிலவி வருகிறது.

ஆனால் அப்படி ஒன்றும் இணைய தள சேவைகள் முடங்காது என 'பெயர், எண், ஒதுக்கீட்டு இணையக் கழகம்' மற்றும் எண்கள் இணைய நிறுவனம் கூறியிருக்கிறது. சிற்சில இணையத் தொழில் நுட்ப சீரமைப்புப் பணிகள் காரணமாக அப்படியான தடைபாட்டுக்கான வாய்ப்பு இருந்த போதும், அது போன்ற இணையத் தொழில் நுட்பச் சீரமைப்பு வேலைகள் இரண்டு மாதங்களுக்கு முன்னமே முடிக்கப் பட்டு விட்டதால், அப்படியான அச்சப் படும் படியான இணைய சேவைகள் முடக்கம் அடையாது என இலாப நோக்கில்லா அரசு சாரா அமைப்பான 'பெயர், எண், ஒதுக்கீட்டு இணையக் கழகம்' தெரிவித்துள்ளது.

இன்றிலிருந்து இந்தியா முழுவதும், பல்வேறு இடங்களில் இணைய சேவை முடக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் எப்போதும் போல தங்களின் இணைய சேவையினைத் தடையில்லாமல் பயன்படுத்தி மகிழலாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,938.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.