Show all

144 ஆண்டுகளுக்குப் பிறகு, தாமிரபரணி புஷ்கர விழா! அடிப்படையென்ன

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விழா என்றாலே விழாதிருக்கக் கொண்டாடப் படுவது என்று பொருள். அந்த அடிப்படையில் நன்றி பாராட்டுவதைத் தலைப்பாக்கி விழா கெண்டாடினர் தமிழர். தைமாதம் உழவுக்கு துணை புரிந்த சூரியன், கால்நடைகள், உறவுகள் ஆகியோருக்காக பெரும்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பெங்கல் என்று மூன்று நாட்கள் விழா எடுப்பது தமிழர் மரபு. அது போல கார்த்திகையில் தீவிழா, ஆடியில் நீர்பெருக்கு ஆற்று விழா கொண்டாடுவர் தமிழர். அறிதோறு அறிதோறு அறியாமை கண்டற்றால், என்பது தமிழர் உணர்ந்த உண்மை. அதன் பொருட்டே தமிழர், தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்று அறிவை போற்றும் அடிப்படையினர் ஆயினர். தமிழர் கற்ற கருத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கல்வியை: ஆசிரியர் மாணாக்கர் என்ற பாங்கில் முன்னெடுப்பது அடிப்படையாகும். ஆசு+ இரியர்= குற்றம் இல்லாதவர். ஆசிரியர் குற்றமில்லாதவராக இருந்தால் போதும். மாணாக்கர்- மாண்பை ஆக்கிக் கொள்பவர். அதாவது மாணவர்கள் அவர்களாகக் கற்று கொள்வார்கள். என்பது தமிழர் கல்வி பயிற்றல் அடிப்படையாகும். ஐரோப்பிய கல்வியில், டீச்சர் - கற்றுத் தருபவர். ஸ்டூடண்ட் கற்றுக்கொள்பவர். ஆசிரியர் மாணவர்களிடையே சமநிலை பேணும் மரபு ஆரியக் கல்வியில் குரு, சிஷ்யன். குரு சொல்வது வேதவாக்கு சிஷ்யன் பணிவிடை செய்து அவரைப் பின்பற்ற வேண்டும். மாற்ற முடியாத முடிந்த முடிபாக ஐந்து வேதங்கள், இரண்டு தொல்கதைகள் அடிப்படையில் கல்வியை கற்பிப்பது. ஆரிய மரபு. ஆரியர்கள் ஒவ்வொன்றுக்கும் முன்பே முன்னோர்களால் கட்டி வைக்கப் பட்ட கதைகளையே தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்வார்கள். அந்த வகையாக தமிழர் பொருளோடு கொண்டாடிய நீர்பெருக்கு ஆற்று விழாவிற்கு கட்டப்பட்டக் கட்டுக் கதைஅடிப்படையில் கொண்டாடுவது புஷ்கரம் என்பதாகும். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ஓரைகளுக்கும்: கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிந்து , துங்கபத்திரை , பிரம்மபுத்ரா, பிராணஹிதா எனப்படுகின்ற 12 ஆறுகளைப் பட்டியலிட்டு அந்தந்த ஓரைகளில் இவ்விழா நடைபெற வேண்டும் என்று புஷ்கரன் என்ற ஆரியன் எழுதி வைத்த அடிப்படையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வியாழன் கோள் எந்த ஆற்றுக்கு புஷ்கரன் ஒதுக்கினாரோ அந்த ஆற்றுக்கு பெருக்கு விழா கொண்டாடப் படுகிறது. 12x12 என்று 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரிய ஆற்று விழா கொண்டாட வேண்டும் என்று புஷ்கரன் எழுதி வைத்திருக்கிறார் அந்த வகையாகத் தான் தற்போது தாமிரபரணிக்கு 144 ஆண்டுகளுக்கு பிறகு பெரியபெருக்கு ஆற்று விழா கொண்டாடப் படுகிறது. தமிரபரணியில் நல்லவேளையாக தண்ணீர் இருக்கிறது இல்லாவிட்டால் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து தாமிரபரணி புஷ்கர விழா நடத்தப் பட்டிருக்கும். தமிழர் ஆடிப் பொருக்கு விழா, கர்நாடகம் காவிரியில் அத்துமீறி அணை கட்டாதிருந்த வரை காவிரியில் நீர்பெருகி வர ஒவ்வொரு ஆண்டும் ஆடியில் கொண்டாடப் பட்டு வந்த நிலையில் தமிழர் விழா காரணம் பற்றியது. ஆரியர் விழா கதைபற்றியது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,938.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.