16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அபிநந்தன் கைது செய்யப்பட்டது போன்ற சம்பவம் கார்கில் போரின் போதும் நடந்துள்ளதாகவும், அவர் விடுவிக்கப்பட்டது போல அபிநந்தனும் விடுவிக்கப்படுவார் என்று இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஏ.ஒய்.டிப்னிஸ் தெரிவித்தார். கார்கில் போரின் போதும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தான்வசம் பிடிப்பட்ட அவர், சிறிது காலம் அங்கு வைக்கப்பட்டப் பிறகு திரும்ப ஒப்படைக்கப்பட்டார். எனவே அதே முன்மாதிரி அடிப்படையில் தற்போது பாகிஸ்தான் பிடித்துவைத்துள்ள இந்திய விமானியும், விடுவிக்கப்படுவார் என்றே நம்புகிறேன் என்றார். பாகிஸ்தான் விமானப் படை பலம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிப்னிஸ், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல அளவுகோல்களில் பாகிஸ்தான் படை இந்தியாவைவிட நவீனமாக இருந்தது. பாகிஸ்தானிடம் அமெரிக்க உபகரணங்கள் இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா அவர்களைவிட முன்னோக்கி சென்றுவிட்டது என்றார். இந்நிலையில் பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான்கான், குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆயுதங்கள் உள்ள நாடுகளில், பதட்ட நிலை அதிகரித்தால், நிலைமை கையை மீறிப் போகும் நானோ, மோடியோ கூட அந்த நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, உட்கார்ந்து பேசுவதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார். எனவே, இனிமேலாவது கொஞ்சம் நடைமுறை அறிவுடன், ஞானத்துடன் நடந்துகொள்வோம். நம்மிடம் சிறந்த விமானப் படை உள்ளது. ஆனால், இங்கிருந்து நாம் எங்கே செல்லப்போகிறோம் என்பதுதான் முதன்மையானது என்று இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஏ.ஒய்.டிப்னிஸ் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,077.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.