Show all

தாங்கள் ஊழலே செய்யாதவர்கள் போன்ற மாயையை உருவாக்குகிறது! நடுவண் அரசு பாஜக

28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிமுக தப்பும் தவறுமாக எதையாவது செய்து ஊழல் கட்சி போல மாட்டிக் கொள்ளும். அதற்கான எடுத்துக் காட்டு சொத்துக் குவிப்பு வழக்கு.

திமுக விதிகளை பின்பற்றி கவனமாக எந்தச் செயலையும் முன்னெடுத்துச் செல்லும் கட்சி. அதற்கான எடுத்துக் காட்டு முன்னம் சர்காரியா ஆணையத்திலிருந்து விடுதலை; தற்போது அலைக்கற்றை வழக்கிலிருந்து விடுதலை.

காங்கிரஸ் எதையாவது செய்து விட்டு,  தப்பை திருத்திக் கொள்ள அடித்து திருத்தி மாட்டிக் கொள்ளும் கட்சி அதற்கான எடுத்துக் காட்டு அலகபாத் அறங்கூற்றுமன்றத் தீர்ப்பைத்; தொடர்ந்து இந்திரா காந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்து பெரிய சர்வாதிகாரி போல பெயர் பெற்றுக் கொண்டது.

நடுவண் அரசு பாஜகவோ தெளிவாக சட்டத்தை திருத்தி விட்டு துணிச்சலாக தப்பு, ஊழல், அடாவடி, சர்வாதிகாரம் அனைத்திலும் ஈடுபடும் கட்சி. அதனால் தான் ஊடகங்கள், அறங்கூற்று மன்றங்கள் எவையாலும் அவர்களை பட்டியல் இடமுடிய வில்லை. நள்ளிரவில் அறிவிக்கப் பட்ட காகித பணத்தாள் மதிப்பழிப்பு, நள்ளிரவில் அமல்படுத்தப் பட்ட சரக்கு-சேவை வரி, தொடங்கப் படாத, முகவரியே இல்லாத ஜியோ  பல்கலைக்கழகத்திற்கு முதன்மை தகுதி என்று இப்படி எடுத்துக் காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 

சுப்பிரமணியசாமி அவர்கள் சொல்வதைப் போல வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியிழக்கும். ஆனால் அவ்வளவு எளிதாக ஊழலில் மாட்டி விட முடியாது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,846.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.