Show all

மோடியை கின்னசில் இடம் பெறச் செய்ய காங்கிரஸ் பரிந்துரை! மக்கள் பணத்தில் அதிக நாடுகளுக்கு சென்ற வகைக்கு

28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களின் வரிப்பணத்தில் அதிக நாடுகளுக்கு சென்று ஒரே இந்தியத் தலைமைஅமைச்சர் என்று மோடிக்கு கின்னஸ் விருது கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கின்னஸ் அமைப்பிற்கு கோரிக்கை வைத்துள்ளது.

மோடி தன்னுடைய 4 ஆண்டு ஆட்சியை முடித்துவிட்டு கடைசி ஆண்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்த நான்கு ஆண்;டுகளில் அவர் பல நாடுகளுக்கு சுற்றி வந்திருக்கிறார். அரசு முறை பயணமாகவும், சாதாரண பயணமாகவும் பல நாடுகளுக்கு சென்று இருக்கிறார்.

இந்த நிலையில் மக்களின் வரிப்பணத்தில் அதிக நாடுகளுக்கு சென்ற ஒரே இந்தியத் தலைமை அமைச்சர் என்று மோடிக்கு கின்னஸ் விருது கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கின்னஸ் அமைப்பிற்கு கோரிக்கை வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர் மூலமாக இந்த தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக இந்தக் கோரிக்கையை கின்னஸ் அமைப்பிற்கு வைத்துள்ளது.

கின்னஸ் அமைப்பிற்கு அவர்கள் அளித்த கடிதத்தில், தலைமை அமைச்சர் மோடி 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்து இருக்கிறார். மொத்தம் 52 புதிய நாடுகளை சந்தித்து இருக்கிறார். இதற்கு மக்களின் வரிப்பணம் ரூ.355 கோடி செலவாகி இருக்கிறது என்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் இந்த கிண்டலான கோரிக்கை டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,846.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.