Show all

இஸ்பேட் பொது மருத்துவமனை வாக்குறுதி நிறைவேற்றம்? விராட்கோலியின் உடல்வலி சவலை நிறைவு செய்த மோடி

04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியில் இஸ்பேட் பொது மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த தலைமைஅமைச்சர் மோடி, அந்த மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படும் என்றும், மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதிக் கொடுத்துள்ளார். ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அப்பகுதியை சேர்ந்த முக்திகந்த பிஸ்வால் என்ற முப்பது அகவை இளைஞர், டெல்லி சென்று மோடியை சந்தித்து அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவுப்படுத்த விரும்பினார். இதனையடுத்து ஒடிசாவிலிருந்து முக்திகந்த பிஸ்வால் கையில் தேசியக் கொடியை பிடித்தபடி நடக்கத் தொடங்கினார். சுமார் 1350 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆக்ராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அவர் மயங்கி விழுந்தார். 

அந்தப் பகுதி பொது மக்கள், ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தற்போது சுயநினைவுக்கு திரும்பிய பிஸ்வால், எப்படியாவது மோடியை சந்தித்து, அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டாமல் நான் சொந்த ஊருக்கு செல்லமாட்டேன் என கூறியுள்ளார்.

நமது நாட்டின் தேசியக்கொடி ஒவ்வொரு முறையும் என்னை ஊக்கப்படுத்துகிறது. அதனால் என் பயணத்தின் அனைத்து கட்டங்களிலும் அதனை வைத்துள்ளேன் என தேசியக்கொடிக்கான காரணம் கூறுகிறார் கிராம மக்களுக்காக நடைபயணம் மேற்கொள்ளும் பிஸ்வால்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,822.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.