04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி வெளிநாடு தப்பிச்சென்று விட்ட நிரவ் மோடி, ஆறு கடவுச்சீட்டுகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளதாம். நிரவ் மோடி வெளிநாட்டில் பதுங்கியிருந்தபடியே, அடிக்கடி பெல்ஜியம் சென்றதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் நிரவ் ஆறு கடவுச்சீட்டுகள் வைத்திருப்பதும், அதில் 2 கடவுச்சீட்டுக்களை மட்டும் பயன்பாட்டில் வைத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த இரு ஆறு கடவுச்சீட்டுகளையும் இந்திய அரசு முடக்கியபோதும், வெளிநாடுகளில் அவரது கடவுச்சீட்டை முடக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இதை பயன்படுத்தி நிரவ் பல நாடுகளுக்கு சென்று வருவது தெரியவருகிறது. இந்நிலையில், நிரவ் மோடிக்கு எதிராக ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுச்சீட்டு வைத்துள்ளதாக, முதல் தகவல் அறிக்கை பதிகை செய்ய, நடுவண் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சாதராண மனிதர்கள் கடன் வாங்குவதிலும் சரி கடவுசீட்டு வாங்குவதற்கும் சரி படாத பாடு படவேண்டியிருக்கும். எப்படி இது போன்ற மோசடி மனிதர்கள் இத்தனை கோடி கடனும் இவ்வளவு கடவுச்சீட்டும் வாங்க முடிகிறது. இப்படி தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் சட்ட நிருவாக அமைப்புகளால் யாருக்கு என்ன பயன். மாட்டிக் கொள்கிறவனுக்கு மட்டுமே எல்லையில்லாத கிடுக்கிப் பிடிகள் மாட்டும் வரை எவ்வளவும் தவறு செய்து கொண்டேயிருக்கலாம் என்கிற சட்ட நிருவாக அமைப்புகளால் யாருக்கு என்ன பயன். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,822.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



