Show all

ஒருவழியாக விடுவிக்கப் பட்டது கதை! விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ்

03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக்பாஸ் வீட்டிற்கு வரப் போகிற  போட்டியாளர்கள் யார் என்பது விடுகதையாக நீடித்து வந்த நிலையில், பல்வேறு அனுமானங்கள் இணையத்தில் தொடர்ந்து பதிவிடப் பட்ட வந்தன. அந்த அனுமானங்களுக்கு நாற்பதிலிருந்து ஐம்பது விழுக்காடு வரையிலான மதிப்பெண் கிடைத்திருக்கிறது.

தற்போது முதல் நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியுள்ளது. ஓவியாவை வைத்து பிக்பாஸ் ரசிகர்களை செய்ய முயற்சித்தது பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய நிகழ்வில்.

ஓவியாவும் ஒரு போட்டியாளர் என்று நினைக்க வைத்து ஏன்? எதற்கு? எப்படி என்று முனுமுனுப்புகள் அடங்குவதற்குள் போட்டியாளர்களை முதல் அதிர்ச்சியில் ஆழ்த்துவதற்கான சிறப்பு அழைப்பாளர் என்று போட்டு உடைத்தார்கள்.

இவர்கள் போட்டியாளர்கள்: 1.யாஷிகா ஆனந்த். 2.பொன்னம்பலம். 3.மகத். 4.டேனியல். 5.சுது வைஷ்னவி 6.ஜனனி ஐயர் 7.அனந்த் வைத்தியநாதன் 8.பாடகி ரம்யா 9.சென்றாயன் 10.மெட்ராஸ் பட நடிகை ரித்விகா 11.மும்தாஜ் 12.பாலாஜி 13.மமதி சாரி 14.நித்யா பாலாஜி 15.ஷாரிக் ஹாசன் (வில்லன் நடிகர் ரியாஸ் கானின் மகன்) 16.ஐசுவார்யா தமிழுக்கு எண்; ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்த பெங்காலி பெண்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,821.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.