எட்டு வழிச் சாலைக்கு தடை என்பதாகவே- முதலில் அந்தப்பகுதி உழவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், முட்டுக்கல்லை பறித்து எடுத்தும் மகிழ்ந்திருந்தார்கள். ஆனாலும் முழு மகிழ்ச்சிக்கு வாய்ப்பில்லை என்பதாக தீர்ப்பின் முழுவிவரத்தில் தெரியவருகிறதாம். 23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: எட்டு வழிச் சாலைக்கு தடை என்பதாகவே- முதலில் அந்தப்பகுதி உழவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், முட்டுக்கல்லை பறித்து எடுத்தும் மகிழ்ந்திருந்தார்கள். ஆனால் உச்ச அறங்கூற்றுமன்ற தீர்ப்பு சொல்வது என்ன! எட்டுவழிச் சாலைக்கு தடையா- இல்லையா- என்ற விளக்கம் முன்னெடுக்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை - சேலம் இடையே எட்டு வழிச் சாலை திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாகச் சாலை அமைக்க ஒன்றிய பாஜக அரசு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. இதற்காக சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, முதல்கட்டப் பணிகளையும் தொடங்கியது. பல இடங்களில் உழவர்களின் நிலங்களில் எல்லைக்கான முட்டுக்கற்கள் நடப்பட்டன. இதனால், அப்பகுதி உழவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர். தொடர்ந்து, இத்திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரியும், திட்டத்தை விலக்கிக் கொள்ளக் கோரியும் ஐந்து மாவட்ட உழவர்கள், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் உட்பட பலரும் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இயற்கை வளங்கள் பாதிப்பு, வேளாண் நிலங்கள் பாதிப்பு உட்பட இதுதொடர்பாக மொத்தம் 45 வழக்குகள் வரிசையாக விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த வழக்குகளை அறங்கூற்றுவர்கள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஆறு மாதங்களுக்கும் மேலாக விசாரித்துவந்தது. அனைத்துத் தரப்பு விவாதங்களும் முடிந்து நாளது 25,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5121 (08.04.2019) அன்று தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், ஒன்றிய நெடுஞ்சாலைச் சட்டம் 1956-ன்படி தமிழக அரசு பிறப்பித்த நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அரசாணை நீக்கம் செய்யப்படுகிறது. எட்டு வழிச் சாலைக்காகக் கையகப்படுத்திய நிலங்களை, எட்டு கிழமைகளில் மீண்டும் உரிமையாளர்களின் பெயரிலேயே பதிவு செய்ய வேண்டும். வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை, எட்டு கிழமைகளில் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இந்தத் திட்டத்துக்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், ஒன்றியச் சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே, எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை உயர் அறங்கூற்றுமன்ற உத்தரவுக்கு எதிராக ஒன்றிய அரசின் ஒன்றிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உழவர்கள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் முன்னெச்சரிக்கை மனுக்களும் பதிகை செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்து உச்ச அறங்கூற்றுமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருக்கிறது. இதை எட்டு வழிச் சாலைக்கு தடை என்பதாகவே- முதலில் அந்தப்பகுதி உழவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், முட்டுக்கல்லை பறித்து எடுத்தும் மகிழ்ந்திருந்தார்கள். ஆனால் தீர்ப்பின் விளக்கத்தில் எட்டுவழிச் சாலைக்கெல்லாம் தடை இல்லை என்பதாக தெரிவித்து இனி என்ன செய்வது என்கிறவாறு சில உழவர்கள் குழப்பத்திற்கு ஆளாகி புலம்பி வருகின்றனர். 1.சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் அறங்கூற்றமன்றம் விதித்த 2.தடை தொடரும். எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை நீக்கம் செய்யப்படுகிறது. இந்தத் தீர்ப்பு பற்றி சேலம் எட்டு வழிச்சாலை திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், சந்திரகுமார் பேசும்போது, உச்ச அறங்கூற்றுமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். கையகப்படுத்திய எங்கள் உழவர்களின் நிலம் திரும்பக் கிடைக்கப்போகிறது. நாடு முழுவதும் எட்டு வழிச்சாலைகள் அமைக்கும் திட்டங்கள் இருப்பதால், அவற்றுக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு இப்போது தடை கிடைத்திருப்பதாகவே நம்புகிறோம். அதிமுக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான சட்டமன்ற உறுப்பினர் வைகைச் செல்வன் தவறான கருத்துகளை முன்வைத்து வருகிறார். ஆளும் அரசியல்வாதிகள் குட்டையைக் குழப்பாமல் இருக்க வேண்டும் என்கிறார். தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக வழக்கறிஞர் பாலு, உழவர்களின் நிலத்தை அரசு நிலமாக மடைமாற்றம் செய்வது தவறு என உச்ச அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ளது. புதிதாக ஆணை கொடுத்து சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே திட்டம் தொடர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாகத் திட்டம் பற்றிய ஆணை வரும்போது அதில் இருக்கும் முரண்களை வைத்து அடுத்து என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்கிறார். பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் கூறும்போது சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் கொடுத்த தீர்ப்பில் சுற்றுச்சூழல் அனுமதி வாங்கிவிட்டுத்தான் நிலம் கையகப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத்தான் இந்த உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பும் சொல்கிறது. திட்டத்துக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் அவசரகதியில் நடந்தவை அனைத்தையும் கைவிட்டு, முறையாகச் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று, மக்கள் கருத்துக்களைக் கேட்டு முறையாக நெடுஞ்சாலைத்துறை இந்தத் திட்டத்தைத் தொடர வேண்டும் என்றார்.
3.எட்டு வழிச்சாலை திட்டத்துக்குத் தடை இல்லை.
4.மீண்டும் நிலம் கையகப்படுத்த ஒன்றிய அரசு புதிய அரசாணையை வெளியிட வேண்டும்.
5.குறிப்பிட்ட அந்தந்தத் துறைகளில் அனுமதி பெற்று முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எட்டு வழிச்சாலை திட்டத்தைப் புதிதாகத் தொடங்கிக் கொள்ளலாம்.
6.நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது, உச்ச அறங்கூற்றுமன்றம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



