Show all

விசாரணையில் திருப்தியின்மையா! இனி குழுமுன் அணியமாவது இல்லை என தலைமை அறங்கூற்றுவர் மீது, பாலியல் புகார்பெண் முடிவு

உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர், ரஞ்சன் கோகோய் மீது, பாலியல் புகார் தெரிவித்திருந்த பெண்: மூன்று நாட்களாக விசாரணை நடத்தி வந்த விசாரணைக் குழுவிற்கு அணியமான நிலையில், இனி அணியமாவது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்று தெரிவிப்பு. 

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலைமை அறங்கூற்றுவர் மீது, பாலியல் புகார் கூறிய பெண், 'இது தொடர்பான விசாரணைக்கு, இனி அணியமாகப் போவது இல்லை' என, அறங்கூற்று மன்ற விசாரணையின் மீதான தனது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர், ரஞ்சன் கோகோய்க்கு எதிராக, அறங்கூற்றுமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர், பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரிக்க, மூன்று அறங்கூற்றுவர்கள் அடங்கிய குழு நியமிக்கப் பட்டுள்ளது. இந்த குழு, மூன்று நாட்களாக விசாரணை நடத்தி வருகிறது.

புகார் தெரிவித்த பெண், மூன்று நாட்களாக விசாரணைக்கு அணியமான நிலையில், நேற்று வெளியிட்ட அறிக்கை: சில முதன்மையான பிரச்னைகள் கருதி, அறங்கூற்றுவர்கள் குழு முன், இனி அணியமாவது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்று இந்த குழுவின் விசாரணை மீதான தனது நம்பிக்கையின்மை அல்லது ஒத்துழைப்பின்மையை தெரிவித்துள்ளார்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,139.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.