பிரான்சில் இருந்து இந்தியா வந்து கொண்டிருக்கின்றன ஐந்து ரபேல் போர்விமானங்கள். இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய முன்னெடுப்பு ஆன இந்த ரபேல் கொள்முதலில், திகில் அத்தியாயங்கள் இன்று வரை தொடர்ந்த வண்ணமாகவே உள்ளன. 14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ரபேல் போர் விமான கொள்முதல் என்பது இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய முன்னெடுப்பு ஆகும். அதற்கான திகில் அத்தியாயங்கள் இன்று வரை தொடர்ந்த வண்ணமாகவே உள்ளன. இந்தியாவுக்கு வருகை தரும் ரபேல் போர் விமானங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில், ஓய்வுக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ரபேல் விமானங்களுக்கும் எச்சரிக்கை பறந்தது. காரணம் ஈரானிலிருந்து சீறிய ஏவுகணைகள். பயந்து பதுங்கு குழிக்கு ஓடிய அமெரிக்க வீரர்கள். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் பிரான்சிடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் பறக்க தயார் நிலையில் இருக்கும் 18 போர் விமானங்களை பிரான்ஸ் கொடுக்கும்; எஞ்சிய 108 விமானங்கள் இந்தியாவில் வைத்து தயாரிக்கப்படும் என்பது ஒப்பந்தம். அடுத்து நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்ற நிலையில் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் சென்ற தலைமைஅமைச்சர் மோடி பிரான்சிடம் இருந்து பறக்க தயாராக இருக்கும் 36 ரபேல் விமானங்களை உடனடியாக வாங்குவோம் என்று அறிவித்தார். இந்த விமானங்களுக்கு பாஜக ஆட்சியில் கூடுதல் விலை கொடுக்க ஒப்புக் கொண்டதாக, இந்த முன்னெடுப்பு மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ரபேல் விமானங்கள் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் நாடாளுமன்றம் முடங்கியது. மெகபூபா முப்தியின் கீச்சுப் பக்கத்தில் இந்தியாவில் அனில் அம்பானியின் நிறுவனத்தை மட்டுமே ரபேல் விமான பாகங்கள் தயாரிப்புக்கான நிறுவனமான பிரான்சின் டசாட்ஸ் தேர்வு செய்ய வேண்டும் என அழுத்தம் தரப்பட்டதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே ஒரு பேட்டி அளித்தார் என்கிற தகவல் வெளியானது. அது இந்த சிக்கலை மேலும் பேரளவாக்கியது. இது அறங்கூற்றுமன்றத்து படிகளும் ஏறியது. தற்போது இந்த ரபேல் விமானங்களில் ஐந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில், இந்தியாவுக்கு வருகை தரும் இந்த ரபேல் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. இரு விமானப் படை தளங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தப்ரா விமானப் படை தளமும், கத்தாரிலுள்ள அல் உதீட் விமானப் படை தளமும் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன. ஆனால், எந்த ஏவுகணைகளும் இந்த தளங்களில் ஒன்றையும் தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மூன்று ஈரானிய ஏவுகணைகள் டியூஸ் தளங்களுக்கு அருகே தண்ணீரில் விழுந்துள்ளன, என்று, தெரியவருகிறது. ஈரான் இராணுவப் பயிற்சியின் போது, ஈரான் புரட்சி படை படகுகளிலிருந்து ஏவுகணையை ஏவிய படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஈரானிய கமாண்டோக்கள் உலங்கு வானூர்தியில் இருந்து கயிறு மூலமாக கீழே இறங்கி பயிற்சி செய்யும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. ரபேல் விமானங்கள் இந்தியா வருகை மற்றும் அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் இந்திய தரப்பும் எச்சரிக்கை நிலையில் இருந்துள்ளது. இந்தியா மற்றும் ஈரான் நாடுகள் இடையே நட்புறவு நிலவும் நிலையில், நமது போர் விமானத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெற வாய்ப்பு இல்லை. இது அமெரிக்க படைகளுக்கு எதிரான போர் பயிற்சிதான் என்கிறார்கள் இந்திய பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.
வட இந்தியர்களின் தொப்பூள் கொடி உறவுகளும், பாஜக கொணர்ந்த, இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பயனாளிகளும், பாஜகவின் விருப்பத்திற்குரிய நாட்டினரும் ஆன ஈரான் நாட்டின், இஸ்லாமிக் புரட்சி கார்ட் கார்ப்ஸ் இராணுவ பயிற்சி மற்றும் ஏவுகணை பயிற்சிகளை மேற்கொண்டது. இந்த ஏவுகணை அல் தப்ரா விமானப் படை தளம் நோக்கி சீறிச் செல்லக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து உளவுத்துறை, எச்சரிக்கை விடுத்தது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



