பாஜக பதவியேற்பில்;- இதுவரை வெளியான தகவல்களின் படி தங்கள் வெற்றிக்கு உதவிய மாநிலங்களுக்கு மட்டும் அமைச்சர் பதவிகள் வழங்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, 17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடியின் அமைச்சரவையில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திலிருந்து 9 பேர்கள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு அடுத்த நிலையில், மகாராஷ்டிராவிலிருந்து 8 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் பீஹாரிலிருந்து தலா 5 பேரும், கர்நாடகாவிலிருந்து 4 பேரும், குஜராத், ஹரியானா, ராஜஸ்தானிலிருந்து தலா 3 பேரும் அமைச்சரவையில் இடம் பெற்றனர். மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்டிலிருந்து தலா 2 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. மேலும் அருணாச்சல், அசாம், சத்தீஸ்கர், டில்லி, கோவா, ஹிமாச்சல், காஷ்மீர், தெலுங்கானா, உத்தரகண்டிலிருந்து தலா ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. தமிழகம், ஆந்திரா, சிக்கிம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,169.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



