Show all

காந்தியார் விரும்பிய காங்கிரஸ்- முன்னெடுக்கிறார் இராகுல்காந்தி! பாஜகவிற்கு நேர் எதிர்தளத்தில் இருந்து தொடங்கும் புள்ளியில்.

நெல்லிக்காய் மூட்டை எதிர்க்கட்சிகளை நம்பி, பாஜகவை விரட்டி விடலாம் என்ற இராகுலின் முயற்சி, படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரசை பாஜகவிற்கு நேர் எதிரான போட்டியாக முன்னெடுக்கும் முயற்சியில் முனைந்திருக்கிறார் இராகுல் காந்தி. 

17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜிவ் கொலை வரை- காங்கிரசின் வெளிநாட்டுக் கொள்கை வரை தீர்மானித்து, காங்கிரசையும், இந்திய அரசியலையும், காய் நகர்த்தும் இடத்தில் இருந்து வந்த பார்ப்பனிய சக்திகள், தொடக்கத்தில் பாஜகவை தங்கள் ஊடகங்கள் மூலம் தூக்கிப் பிடித்து வளர்த்து, பாஜக வெற்றிக்குப் பிறகு, பாஜகவில் ஐக்கியம் ஆகி விட்டன. 

இராஜிவ் கொலை வழக்கில்- அதன் போக்கையும், முடிவையும் தொடர்ந்து கவனித்த நிலையிலும், நெல்லிக்காய் மூட்டை எதிர்க்கட்சிகளை நம்பி, ஏமாந்த நிலையிலும், இராகுல் நிறைய புடம் போடப் பட்டிருக்கிறார். காங்கிரசை நயவஞ்சகமாக, குழி தோண்டிப் புதைத்த பார்ப்பனிய சக்திகளுக்கு எதிராக வென்றெடுப்பதுதான் சரியான தீர்வு என்று கருதியிருக்கிறார். இராகுல் காந்தி. 

அதன் பொருட்டு காங்கிரசின் அடுத்த தலைவராக தலித் அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென ராகுல் காந்தி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காந்தி விரும்பிய காங்கிரசை கட்டமைக்காமல், காந்தியாரையே அரசியலில் இருந்து, மற்றும் முழுமையாக வெளியேற்றிய பார்ப்பனிய சக்திகள், இராஜிவ்; கொலைவரை காங்கிரசை தவறான பாதையில் முன்னெடுத்து வந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, இன்றைக்கு முழுவதுமாக பாஜகவில் இணைந்து விட்ட நிலையில், இராகுல் முன்னெடுக்கும் முயற்சியை, காங்கிரசில் இருந்தும் பார்ப்பனிய சக்திகளின் உள்ளடி வேலைகளை, சதிகளையெல்லாம் கொஞ்சமும் புரிந்து கொண்டிராத  காங்கிரஸ்காரர்கள் இராகுலை, இராகுலின் இந்த காந்தியார் விரும்பிய காங்கிரஸ் முயற்சியை எப்படி புரிந்து கொள்வார்களோ? 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,169.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.