மோடியின் 20 இலட்சம் கோடி தொகுப்பில்- மாநில அரசுகளின் கடன்பெறும் உச்சவரம்பை 5 விழுக்காடாக உயர்த்த முடிவு என்று இன்று அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். 04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மோடியின் 20 இலட்சம் கோடி தொகுப்பில்- மாநில அரசுகளின் கடன்பெறும் உச்சவரம்பை 5 விழுக்காடாக உயர்த்த முடிவு என்று இன்று அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். மாநிலத்தின் கடன் உச்சவரம்பு உயர்த்தல் என்கிற நடுவண் பாஜக அரசின் இந்த அதிகாரப்பாட்டிற்கு நான்கு நிபந்தனைகள் வேறாம். அடுத்த 1 விழுக்காடு (3.5-ல் இருந்து 4.5) கடன் வாங்கும் பணத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, மின்சார பங்கீடு உள்ளிட்ட நான்கு துறைகளுக்குப் பயன்படுத்த வேண்டுமாம். இதில் மூன்று துறைகளில் பயன்படுத்தினால் மட்டுமே கடைசி அரை (.5) விழுக்காடு கடன் வாங்க அனுமதி வழங்கப்படும். இந்தக் கடன் பெறும் வசதி கூட அடுத்த ஓர் ஆண்டுக்கு மட்டுமேவாம். கடனுதவிக்கு ஒங்க அனுமதியும் வேண்டாம், முழுக்க முழுக்க வடஇந்தியத் தொழிலாளர்கள், வடஇந்தியப் பகுதிகள் பயன்பெறும் இந்த நான்கு நிபந்தனைகளும் எங்களுக்கு வேண்டாம் என்று அறிவிக்கிற திராணி எந்த மாநிலக்கட்சிகளுக்கும் இல்லை என்பதுதாம் தென்னிந்திய மக்களுக்கான சோகம். இதன் மூலம் மாநில அரசுகள் கூடுதலாக 4.28 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற முடியுமாம். இப்படி கடன் வாங்க கொடுக்கும் அனுமதிக்கு எதற்கு 20 இலட்சம் கோடி தொகுப்பு என்ற கேள்வி அனைத்து தரப்பிலிருந்தும் எழவேண்டும். நடுவண் பாஜக அரசைப் போல ஓர் அரசு உலகின் எந்த நாட்டு மக்களுக்கும் இது வரை அமைந்திருக்க வில்லை என்பது ஒரு வரலாற்று உண்மையாக நிலைக்கப் போகிறது என்பதை மீண்டும் நிலை நாட்டி வருகிறது நடுவண் பாஜக அரசு. அண்மையில் ‘பிரிக்ஸ்’ நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி, 7,500 கோடி ரூபாய் இந்தியாவிற்கு கடன் வழங்கியுள்ளது. இவ்வங்கி, இந்தியாவின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கிஉள்ளது. இந்தக் கடன் தொகையால், ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் தோராயமாக இருக்கும் கடன் தொகை 60,034 ரூபாய் உடன், ரூபாய் 55 கூடி 60089 ஆக மாறப் போகிறது. இப்போது தமிழ்நாடும், நம்மீது வாங்கும் கடன் வரம்பை உயர்த்திக் கொடுப்பதற்கு 20இலட்சம் கோடி தொகுப்பு உதவுகிறதாம். நம் தமிழ் மக்களை கடனாளி ஆக்குவதற்கான இந்த நிபந்தனைக்கு, நாம் புலம்பெயர் வடஇந்தியத் தொழிலாளர் பயன்பெறும் வகைக்கு ஒரேநாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தைச் செயல்படுத்தியாக வேண்டுமாம்.
இதுகுறித்து இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் ‘மாநில அரசுகளின் கடன்பெறும் உச்சவரம்பு 3-ல் 5 விழுக்காடாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் அரை விழுக்காடு கடன் வாங்க எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



