Show all

நடிகர் விஜய்சேதுபதி மீது புகார்! பாஜக என்று சொல்லிக் கொண்டு, நான்கைந்துபேர்கள் காவல்நிலையத்தில் மனு

ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது தங்களை பாஜகவினர் என்று கூறிக்கொண்டு நான்கந்து பேர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது தங்களை பாஜகவினர் என்று கூறிக்கொண்டு நான்கந்து பேர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபி காவல் நிலையத்துக்கு நேற்று கோபி பாஜக உள்ளூர் நிர்வாகிகள் சிலர் வந்தனர். பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். 

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் சேதுபதி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அது மத அடிப்டையாகவும், தேசிய இறையாண்மைக்கு எதிராகவும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் இருந்தது. விஜய் சேதுபதியின் இந்த பேச்சால் மனவேதனை அடைந்துள்ளோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். காவல்துறையினர் மனுவை பெற்றுக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.