Show all

நாளது 19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122 ல் ஊரடங்கை முடித்துக் கொண்டு தமிழகம் நிமிர்ந்தெழ வேண்டும்!

தமிழகத்தில் நாளது 18,வைகாசி (மே 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் நாளது 18,வைகாசி (மே 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் 18,வைகாசி (மே 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 3-ஆவது முறையாக கொரோனா பரவலில் சிக்காமல் இருப்பதற்காக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இது இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் 4-ஆவது முறையாக புதிய விதிகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொலைகாட்சி எட்டுமணி உரையில் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் 18,வைகாசி (மே 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும். பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்.

கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் புதிய தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

அரசு பணிகள், தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு, தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும் வேன்களில் 7 நபர்களும், இன்னோவா போன்ற கார்களில் 3 பேரும், சிறிய கார்களில் இருவரும் (ஓட்டுநர் தவிர) செல்ல அனுமதிக்கப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.