Show all

ரூ.20 லட்சம் கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள்! நேற்று 8 மணி பேச்சில் தலைமைஅமைச்சர் அறிவிப்பு. மூட்டையில் என்ன இருக்க வேண்டும் கமல் ஆர்வம்

நேற்றைய இரவு எட்டு மணி பேச்சில் தலைமைஅமைச்சர் மோடி 20 லட்சம் கோடி ரூபாய் திட்டம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ஏழைகளுக்கு எவ்வளவு போய் சேரும் என்பதை கணக்குப் பார்க்கப் போவதாக மிரட்டியுள்ளார் கமல்.

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நேற்றைய இரவு எட்டு மணி பேச்சில் தலைமைஅமைச்சர் மோடி 20 லட்சம் கோடி ரூபாய் திட்டம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முதலாவது நபரான தலைமைஅமைச்சர் மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பதை எதிர்பார்ப்பேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா நுண்ணியிரியிடம் தற்காத்துக் கொள்ளும் நோக்கத்திற்காக, மக்கள் விலைகொடுப்பில், இந்தியா முழுவதும் ஊரடங்கு ஏறத்தாழ ஒரு மண்டலமாக (48நாட்கள்) நடைமுறைபடுத்தப்படுள்ளது. ஊரடங்கு உத்தரவு வரும் ஞாயிற்றுக் கிழமை நிறைவுக்கு வரும் நிலையில் தலைமை அமைச்சர் மோடி நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றினார். 

அப்போது அவர் கூறுகையில், 20 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள். இந்த பொருளாதார வளர்ச்சி திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில், தலைமை அமைச்சர் மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பதை எதிர்பார்ப்பேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 50 பணமுதலைகளுக்கு 68000கோடி கடன் தள்ளுபடி போன்று திட்டம் அமைந்து விடுமோ என்று ஐயுறுகிறார் போல இருக்கிறது கமல். 

மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் திட்ட மூட்டையை அவிழ்த்தால் என்ன இருக்கும்? ஆர்வத்தில் முண்டியடிக்கும் நபர்களில் முதல் ஆளாய் இருக்கிறார் கமல்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.