Show all

திருத்தணிகாசலத்தை மேலும் 6 நாள் காவலில் விசாரிக்க அனுமதி! கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பேரறிமுகப்படுத்தி வந்து கைதானவர்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக பேரறிமுகப்படுத்தி வந்தவர் சித்த மருத்துவ ஆர்வலர் திருத்தணிகாசலம். இதனால் கைதாகி, அவரது காவல் முடிந்த நிலையில், மேலும் 6 நாள் காவிலில் வைத்து விசாரிக்க சென்னை காவல்துறைக்கு, எழும்பூர் அறங்கூற்றுமன்றத்தில் அனுமதி

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக பேரறிமுகப்படுத்தி வந்தவர் சித்த மருத்துவ ஆர்வலர் திருத்தணிகாசலம்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய திருத்தணிகாசலம் இது தொடர்பாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் காணொளி பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், திருத்தணிகாசலம் மருத்துவக் கல்வி பெற்றதற்கான தகுதிச் சான்றிதழ் எதுவும் இல்லாதவர் என்கிற நிலையில், இது போன்ற ஆர்வங்கள் போலிமருத்துவம் என்கிற கோணத்தில் பார்ப்பதற்கே சட்டத்தில் இடம் இருக்கிற நிலையில் அவர் மீது, “பொதுமக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது சட்டஅடிப்படையாக நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குநர் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், சென்னை நடுவண் குற்றப்பிரிவு காவலர்கள் அவரை தகவல் தொழில்நுட்பச் சட்டத்திலும், அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டது மற்றும் நோய்த்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழும் கடந்த கிழமை கைது செய்தனர்.

தற்போது அவர் அறங்கூற்றுமன்ற காவலில் இருக்கிறார். அவரது காவல் முடிந்த நிலையில், மேலும் 6 நாள் காவிலில் வைத்து விசாரிக்க சென்னை காவல்துறை எழும்பூர் அறங்கூற்றுமன்றத்தில் அனுமதி கோரியது. காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்ற அறங்கூற்றுமன்றம், 5,வைகாசி (மே 18) வரை திருத்தணிகாசலத்தை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.