Show all

தோண்டத் தோண்ட ஆதாரங்கள்! கீழடி அகழ்வாராய்ச்சியில்-5000 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு கண்டுபிடிப்பு.

தமிழரின் ஐயாயிரம் ஆண்டு பழமையை, தமிழர்தம் இலக்கியங்கள் தெளிவாகப் பறை சாட்டுகின்றன. அவற்றை நிலைநாட்ட ஆதாரங்களைத் தேடிப் போவதற்கு ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுக்கிறார்கள். ஆனால் அந்த ஆராய்ச்சிகள் அள்ளிக் அள்ளிக் கொடுக்கின்றன ஆதாரங்களை. கீழடி அகழ்வாராய்ச்சியில்-5000 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  தமிழர் தம் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்கள்: தமிழரின் அகம் சார்ந்த பண்பாடு, புறம் சார்ந்த நாகரிகச் சிறப்பினை தெளிவாக விளக்குகின்றன. 

5121 ஆண்டுகளுக்கு முன்னம் தொல்காப்பியம் அரங்கேற்றப் பட்ட காலத்தில், தமிழ்த் தொடர் ஆண்டும் அரங்கேற்றப் பட்டது. தமிழ் அடிப்படை எண்களில் தொல்பத்து (ஒன்பது) கண்டு பொருத்திக் கொள்ளப் பட்ட காலமும் அதுவே. அந்த தொல்பத்து கண்டுபிடிப்பதில் தொல்காப்பியரின் பங்கு அளப்பரியது. அந்த தொல்பத்தை நினைவு கூறும் விதமாகவே தொல்காப்பியர் தனது இலக்கண நூலுக்கு தொல்காப்பியம் என்று பெயரிட்டார். அந்த இலக்கண நூலில் ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒன்பது ஒன்பது பாடல்கள் என்ற அடிப்படையில் அமைக்கவும் செய்தார்.  

ஏன் தொல்காப்பியர் ஒன்பதை அவ்வளவு கொண்டாட வேண்டும்? தொடர் ஆண்டுக் கணக்கை அமைக்கிற போது, அடிப்படை எண்கள் குறித்தும் கவனிக்கப் பட்டது. அதுவரை அடிப்படை எண்கள் ஒன்று, இரண்டு, முன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என்று எட்டு வரைதான் இருந்தன. எட்டுக்கு அடுத்து பத்;து, பதினொன்று, பனிரெண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு அப்பறம் இருபதுதான். பத்தொன்பது, இருபத்தொன்பது எல்லாம் இல்லை. அதே போல தொல்நூறு தொல் ஆயிரம் எல்லாம் இல்லை. 

இந்த எட்டுக்கும் பத்துக்கும் இடையே புதியதாக உருவாக்கப் பட்ட எண்ணுக்கு தொல்பத்து என்று இந்த மாற்றத்தை நினைவு கொள்ளும் விதமாகப் பெயரிட்டார் தொல்காப்பியர். அதன் அடிப்படையிலேயே தொல்நூறு, தொல்ஆயிரம் எல்லாம் பெயரிடப்பட்டன. தொல்பத்து தமிழில் ஒன்பதாகி விட்டது. ஆனால் தமிழின் கிளை மொழிகள் சிலவற்றில் இன்னும் தொல்பத்து என்றும், தொம்பத்து என்றும், தொண்டு என்றும் வழங்கப் படுகின்றன. இந்த ஒன்பது வேறு பெயர் போல ஆகிவிட்டது பிரச்சனை யில்லை. ஆனால் தொன்னூறு, தொள்ளாயிரம் என்பவைகளை இந்த வரலாறு தெரியாதவர்கள் நூறுக்கு முன்பே தொன்னூறு அது ஏன்? ஆயிரத்திற்கு முன்பே தொள்ளாயிரம் அது ஏன் என்று குழம்பிக் கொள்கின்றனர். 

இந்த எண்மாற்றம், தொல்காப்பிய அரங்கேற்றம், தொடர் ஆண்டு அமைப்பிற்கு பிறகு தமிழர்தம் நாவலந்தேய மண்ணில் அனைத்துத் துறைகளிலும் புரட்சிகளும் வளர்ச்சிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப் பட்டன. 

வடக்கே சிந்து சமவெளி நாகரிகம், தெற்கே மூவேந்தர்கள் முறையான ஆட்சிகள், போருக்கும் இலக்கணம் வகுத்த தமிழ்ச் சான்றோர்கள்- புலவர்கள். திரைகடலோடி திரவியம் தேடு என்று கலம் செலுத்திய வணிகர்கள். கல்வெட்டுக்கள், இலக்கியங்கள், அழகிய நகரங்கள், அணைக்கட்டுகள், என தமிழர் நாகரிகம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. எல்லாம் ஆரியர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக நாவலந்தேயத்திற்குள் நுழையும் வரை. 

ஆரியர்கள் வரவுக்கு பிறகு நாவலந்தேயம் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது. கற்பனை புளுகு இலக்கியங்கள், அகம் புறம் என்று போற்றிக் கொண்டது போய் இலக்கியங்களில், கலைகளில், ஆபாசம் முன்னெடுக்கப் பட்டன. அரசர்களுக்கு அந்தப்புரங்கள் அமைந்தன. சான்றோர்கள்- புலவர்கள் இடத்தில் இராஜ குருக்கள் அமைந்தனர். மக்கள் நான்கு வருணங்களாக பிரிக்கப்பட்டு சாதிய அடிப்படையான ஏற்றதாழ்வுகள் கொண்டாடப் பட்டன. ஆண்டான் அடிமை வேதாந்தம் பேசப்பட்டது. பிரம்மாவின் நெற்றியில் பிறந்த இனம், காலில் பிறந்த இனம் என்றெல்லாம் அடிமைதனங்கள் உருவாக்கப்பட்டன. 

தமிழர்தம் நாவலந்தேயத்தைத் தேடி உலகினர் இந்தியாவில் கால் பதித்த போது அந்த புரட்சியும் வளர்ச்சியும் நிறைந்த நாவலந்தேயம் இல்லை. இந்த அழுகிப்போன சமுதாய அமைப்பு முறை கொண்ட பார்ப்பனிய ஆதிக்கமே இருந்தது.

பிரித்தானிய இந்தியாவில்தான் மீண்டும் அந்த புரட்சி வளர்ச்சி கால ஆய்வுகள் முன்னெடுக்கப் பட்டு சிந்;;;;து சமவெளி நாகரீகம் வெளிக் கொணரப் பட்டது. தமிழ் தனித்த மொழியாக அடையாளம் காணப்பட்டது. 

இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஆட்சியில் அமைந்தவர்கள் வடபகுதி மக்களாகிப் போன நிலையில், அந்த அழுகிப்போன சமுதாய அமைப்பு முறை கொண்ட பார்ப்பனிய காலத்தை மீட்;கும் முயற்சி இருக்கிறதே யொழிய அதற்கு முந்தைய தமிழர் நாவலந்தேய மீட்பு குறித்த முயற்சிகள் தப்பித்தவறி கீழடி போல ஒன்றிரண்டு மட்டுமே முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. 

அந்த ஒன்றிரண்டு ஆய்வுகளே ஏராளமான ஆதரங்களை அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் நடுவண் அரசில் தொடர்ந்து அமைந்து வருகிற வடபகுதி தலைவர்களுக்கு மனம் இல்லாமலே இருக்கிறது. 

தமிழர்களின் நாகரிகம் பண்பாட்டினை உலகிற்கு தெரியப்படுத்திய கீழடி அகழ்வாராய்ச்சி மேலும் ஒரு பெருமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் பழந்தமிழர்கள் வாழ்ந்த சுவடுகள் தென்படுவதை கண்டுபிடித்த வரலாற்று ஆய்வாளர்கள். அந்த பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணியை மேற்கொண்டுள்ளனர். முதல் 4 கட்ட ஆராய்ச்சியில் பல்வேறு விதமான பொருட்களும், வரலாற்று சான்றுகளும் கிடைத்தன.

தொடர்ந்து 5-வது கட்ட ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சி பகுதியில் உறைகிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கிணற்று நீர் பாசனம் செய்திருக்கின்றனர் என தெரிய வந்துள்ளது. மேலும் அந்த கிணறு சிறியதாகவும் 7 அடி ஆழம் கொண்டதாகவும் உள்ளது. அந்த காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் மேலே இருந்திருப்பதால் 7 அடியிலேயே தண்ணீர் கிடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கு முன்னால் நடந்த அகழ்வாராய்ச்சிகளிலும் இதுவரை மூன்று கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. பழங்கால மக்கள் கீழடியில் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகள் அதிகளவில் கிடைத்துள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,230.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.