Show all

இந்திரா அமல்படுத்திய நெருக்கடிநிலை இந்தியாவின் இருண்டகாலம்: மோடி! நடக்கறது இறந்த காலம்.

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திரா காந்தி அவர்களின் நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நெருக்கடி பிரகடனத்தை, மோடி நினைவு படுத்திப் பேசியது, பொது மக்களை கடுமையான கோபத்திற்குள்ளாக்கி யிருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு மோடியை கிழித்;து தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

(!) எமர்ஜென்சி காலத்தில் தேசம் எப்படி இருந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வாய்பில்லை  - பிரதமர் மோடி! நீங்க நாலு வருடம் செய்கின்ற ஆட்சியிலே அதை உணர்ந்து கொண்டோம்....!

(!) ‏இத்தன ஆண்டுகளா இல்லாம ஏன் இப்போ எமர்ஜென்சி நாள மறுபடியும் ஞாபகப்படுத்துறாங்க..?? இப்போ  ஆட்சியில நடக்குறதுலாம் சாதாரணம் தான்னு நிருபிக்கவா..???

(!) ‏அதிகாரபூர்வமா அறிவிக்கப்பட்டது அன்று

அதிகாரபூர்வமா அறிவிக்கபடாமல் இன்று எமர்ஜென்சி

(!) ஆளுநரை விமர்சித்தால், 7ஆண்டு சிறை என்பது, நவீன எமர்ஜென்சி தானே....

(!) ‏எமர்ஜென்சி காலம் கருப்பு காலம் மோடியின் காலமும் அதேதான்....

(!) ‏எமர்ஜென்சி பாடமாக்கப்படும்-ஜவ்டேகர்...

குஜராத் வெறியாட்டம், பணமதிப்பு நீக்கம் அனைத்தையும் பாடமாக்கலாம்...

(!) அந்த காலத்தை நினைவுபடுத்தி, இப்போதுள்ள எமர்ஜென்சி மாதிரி நிலையை நியாயப்படுத்தவா? இந்த குரளி வித்தையெல்லாமா மக்கள் நம்புறாங்க

(!) இத்தன வருசமா இல்லாம ஏன் இப்போ எமர்ஜென்சி நாள மறுபடியும் ஞாபகப்படுத்துறாங்க..?? இப்போ  ஆட்சியில நடக்குறதுலாம் சாதாரணம் தான்னு நிருபிக்கவா..???

(!) ‏நெருக்கடி நிலை காலத்தில் தேசம் எப்படி இருந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வாய்பில்லை ---- பிரதமர் மோடி

தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனா பாருங்க இப்பவும் அதே நிலை தான்..

(!) இப்ப இருக்கறத விட மோசமாவாயா இருந்திருக்கப்போவுது அப்ப இருந்த நெருக்கடிநிலமை

(!) எமர்ஜென்ஸி காலத்தில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். நாட்டில் என்ன நடக்கிறது என இளைஞைர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்-பிரதமர் மோடி...

எமர்ஜென்ஸி காலத்தைவிட இந்தகாலம் மோசமாக உள்ளது உங்க சர்கார்

(!) ‏ஜனநாயகத்தின் இருண்ட நாட்களைப் பற்றி மோடி பேசுவது நகைமுரண்.

(!) இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடிநிலை இந்தியாவின் இருண்டகாலம் - பிரதமர் மோடி

நடக்கறது இறந்த காலம்.

(!) அன்னை இந்திராகாந்தி 1975ல் அறிவித்துவிட்டு எமர்ஜென்சியை அமல்படுத்தினார் ஆனால் இன்று மோடியின் ஆட்சியில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்

இப்படி நிறைய எழுதிக் கொண்டே யிருக்கின்றனர்; பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் மக்கள், சமூக வலைதளங்களில்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,830.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.