Show all

செல்பேசி எண்ணின் உரிமைதாரர்! நேற்று ப்ளிப்கார்ட், இன்று பாஜக

 

 

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இரண்டு இயர் போன்கள் வாங்கியவருக்கு அனுப்பப்பட்ட பெட்டியில் தலைக்கு தேய்க்கும் எண்ணெய் குப்பி இருந்துள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் சிப்பத்தில் இருந்த ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு அழைத்துள்ளார். ஆனால், தொடர்பு துண்டிக்கப்பட்டது. சில வினாடிகளில், 'பாஜகவுக்கு வரவேற்கிறோம். உங்களது உறுப்பினர் எண் ...... உங்களது, பெயர் மற்றும் விலாசத்தை அனுப்பவும்' என குறுஞ்செய்தி வந்துள்ளது. 

என்ன நடக்கிறது என புரியாமல் இருந்த அவர் அதே எண்ணை தனது நண்பர்களுக்கும் அனுப்பி, அழைக்கச் செய்துள்ளார். அவரது நண்பர்களுக்கும் அதே போல குறுஞ்செய்தி வந்துள்ளது. தனது அனுபவத்தை முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட இந்த செய்தி பரவியது.

இதற்கு விளக்கமளித்துள்ள அம்மாநில பாஜக தலைவர், 'சிப்ப  உறையில் கொடுக்கப்பட்ட எண் பாஜவுக்கு சொந்தமானதே. இந்த எண்ணை யார் வேண்டுமானாலும் பகிரலாம். ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கும் மாநில பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என கூறியுள்ளார்.

இந்தச் செய்தி இணையதளத்தில் பரவியதை அடுத்து, சப்தமில்லாமல் அந்த இளைஞருக்கு அழைப்பு செய்த ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையம், 'உங்களுக்கு அனுப்பிய எண்ணெய் குப்பியை உபயோகப்படுத்தவும் அல்லது தூக்கி எறியவும். தற்போது எங்களிடம் ஒரு செட் இயர் போன் மட்டுமே உள்ளது. அதனை உடனே அனுப்புகிறோம். மற்றொரு செட்டுக்கான பணத்தை திரும்ப அனுப்பி விடுகிறோம்' என கூறியுள்ளது.

மேலும், சிப்பத்தின் மீது இருந்த எண் மூன்றாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தியது. தற்போது உபயோகப்படுத்தப்படும் எண்ணுக்கு பதிலாக பழைய எண் ஒட்டப்பட்டுள்ளது என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

பரவாயில்லையே ப்ளிப்கார்ட் இந்த அளவிற்காவது பொறுப்பாய் இருக்கிறதே! வாடிக்கையாளர் அடைந்த மனஉலைச்சல் அனுபவம் உள்ளவர்களுக்கு தாம் புரியும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,830.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.