Show all

அசைவற்று நின்றது இந்தியா! நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம்; கடைகள், பேருந்துகள் இயங்கவில்லை

25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு என்று செய்தது எதுவுமேயில்லை. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மக்களுக்கு அளித்து வரும் தொல்லைகள் ஏராளம். 

அதில் ஒன்றாக மக்கள் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகின்றனர். இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தியா முழுக்க முழுஅடைப்பு போராட்டம் கடைபிடிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை போராட்டம் நடக்கும்.

காங்கிரசு அழைப்பு விடுத்திருக்கும் போராட்டத்திற்கு 40க்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மாலை 4 மணிக்கு இந்தியா முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளன. எதிர்க்கட்சிகள் எல்லாமே ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் திமுகவின் தலைமையில் போராட்டம் நடக்கிறது.

இதனால் இன்று இந்தியா முழுக்க போராட்டம் நடக்கும் மாநிலங்களில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன. வணிகர் அமைப்புகள் அனைத்தும் கடைகளை அடைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. தொழிலாளர்கள் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதேபோல் போராட்டத்திற்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்கிய மாநிலங்களில் எல்லாம் பேருந்துகள் இயங்கவில்லை. அலுவலகம், அரசு பணிகள் எதுவும் நடக்கவில்லை. 

ஒட்டு மொத்த இந்தியாவே அசைவற்று நிற்கிறது.

இந்தக் கோபத்தை வரப் போகும் நாடளுமன்றத் தேர்தலிலும் காட்ட மக்கள் அணியமாகத்தான் இருக்கிறார்கள். பாஜக வாக்குப் பதிவு எந்திரங்களில் தில்லாலங்கடி செய்யாமல் இருந்தால், நாடு முழுக்க பாஜக வைப்புத்தொகை இழப்பது உறுதி. எந்திர வாக்கெடுப்பைத் தடுத்து, பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,906.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.