24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'தமிழ் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல் போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே பைபிள் உருவாக மூலமானது. சேரநாட்டுத் தமிழர் பிரிவினர் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர்.' தமிழர் குறித்து விவேகானந்தர் கருத்து இது ; இவர்தான் விவேகானந்தர். சிகாகோவில் 125 ஆண்டுகளுக்கு முன்பு விவேகானந்தர் இந்திய இறையியல் குறித்து உரையாற்றினார். அவர் ஹிந்து அல்லர். அவர் காலத்தில் இன்றைக்கு புழக்கத்தில் இருக்கிற ஹிந்து மதம் பல்வேறு தனித்தனி சமயங்களாக இருந்தன. இன்றைக்கு இருக்கிற ஹிந்து மதம் பக்திவழியின் பாற்பட்டது. விவேகானந்தர் சிகாகோவில் 125 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய இந்திய இறையியல், வடஇந்திய மக்களால் ஞான மார்க்கம் என்றும், தமிழர்களால், அறிவின் வழி (சித்தம்) என்றும் அழைக்கப் படுவதாகும். அதனுடைய 125-வது நினைவு நாளையொட்டி சிகாகோவில் 2-வது உலக ஹிந்து மாநாடாக நடத்தப் பட்டது. இதில் பேச ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அழைக்கப் பட்டார். அப்போது மோகன் பகவத் பேசுகையில், ஹிந்துக்கள் ஒருபோதும் ஒன்று சேரமாட்டார்கள், என்று தனது ஆதங்கத்தை வெளிப் படுத்தினார். எப்படி ஒன்று சேருவார்கள்? எல்லா ஏற்றதாழ்வுகளையும் போற்றிக் கொண்டு, யாரெல்லாம் கிறித்துவமோ, மகமதியமோ, பௌத்தமோ, சமனமோ, சீக்கியமோ இல்லையோ அவர்கள் எல்லாம் ஹிந்துக்கள் என்று அதிகாரத்தால் வளைத்துக் கொண்டால், எப்படி அந்த வட்டத்திற்குள் வருகிற அதிகார வர்க்கமும், அதிருப்தி வர்க்கமும் ஒன்று சேர முடியும். ஹிந்து என்ற சொல் பாரசீக மொழி மூலமாக உருவான சொல்லாகும். ஹந்து என்ற சொல், முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியற் சொல்லாக, சிந்து நதியின் கிழக்குப் பக்கம் வசிக்கும் அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அப்படி பாரசீகர்களால் பயன்படுத்தப்பட்ட காலத்தில் ஹிந்து என்ற சொல் ஒரு மதத்தைக் குறிக்காமல் ஒரு இடத்தைக் குறிப்பதாகவே இருந்தது. நேரு, தான் இயற்றிய இந்தியாவின் கண்டுபிடிப்பு எனும் நூலில் இதைக் குறிப்பிடுகிறார். ஐரோப்பிய மொழிகளில் ஹிந்து என்ற சொல், பாரசீக மொழி மூலமாக அரேபிய மொழியில் உருவான சொல் வழக்கான அல்-ஹிந்த் என்பதிலிருந்து உருவானது. தற்கால இந்தியத் துணைகண்டத்தின் நிலப்பகுதியைக் குறிக்க ஹிந்துஸ்தான் எனும் சொல்வழக்கு மிகவும் பிரபலமடைந்தது. இறுதியில், ஐரோப்பிய வணிகர்களும் ஐரோப்பியக் குடியேறிகளும், தமிழர் மூலம், நாவலந்தேயம் என்று அறிமுக மிருந்த இமயத்திற்கு தெற்குப் பகுதியை இந்தேய என்று உச்சரித்து, மதத்தினரையும் சேர்த்துக் குறிக்க இந்தூசு என்ற சொல்லைப் பயன்படுத்தினர். ஆங்கில மொழியில் ஹிந்து சமயம் என்ற சொல், இந்திய நிலபரப்பில் தோன்றிய அனைத்து சமயம், மெய்யியல் மற்றும் கலாசார மரபுகளைச் சேர்த்துக் குறிக்க அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர், ஹிந்து என்ற சொல் இசுலாமியர்கள், சீக்கியர்கள், சைனர்கள், மற்றும் கிறித்தவர்கள் தவிர பிறரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில், சமயம் மற்றும் மெய்யியல் சார்ந்த ஆய்வுகளில் ஹிந்து என்ற சொல் இந்திய நிலபரப்பில் தோன்றிய அனைத்து சமயம், மெய்யியல் மற்றும் கலாசார மரபுகளைச் சேர்த்துக் குறிப்பதாகவே பொருள் கொள்ள அதிகார வர்க்கத்தால் கட்டமைக்கப் பட்டு விட்டது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,905.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



