25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யாவை வெளியேற்றவே பார்வையாளர்கள் வாக்களித்தனர். ஆனால் பார்வையாளர்கள் ஐஸ்வர்யாவை காப்பாற்ற வாக்களித்ததாக போலி கணக்கு காட்டி அவரை காப்பாற்றிவிட்டார் பிக் பாஸ். என்று முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான காஜல் பசுபதி; விளக்கம் அளித்துள்ளார். கமலுக்குத் தேவை வருமானம் இல்லை புகழே என்பதை வாழ்க்கையின் பல நேரங்களில் நிரூபித்திருக்கிறார் கமல். ஆனால், அப்படிப் பட்ட கமலுக்கே பணத்திற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சப்பைக் கட்டு கட்டுகிறார் என்பது போல, அவப்பெயரைத் தேடித் தந்து விட்டார் நேற்றைய நிகழ்ச்சியில், பிக்பாஸ். அரசியல் வளர்ச்சிக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பயன் படுத்தி வருவாதாக பலமுறை தொலைக் காட்சி நிகழ்ச்சி மூலம் தெரிவித்திருக்கிறார் கமல். அப்படிப் பட்ட கமல், இயக்குநர் நடத்துதலுக்ககேற்ப பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிக்கலாமா? என்று கமல் அபிமானிகள் இணையத்தில் புலம்பத் தொடங்கி விட்டார்கள். பாவம் கமல்! எப்படி பிக்பாஸ் வலையில் இருந்து விடுபடப் போகிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,906.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



