Show all

சீனஆதிக்கப் பிடியில் இந்தியா! குழந்தை பால்புட்டி, வனிதையர் செல்பேசி, உலகஉயரச்சிலை, பாகிஸ்தான்வழி வடக்கு இலங்கைவழி தெற்கு

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அன்று கிழக்கிந்தியக் கம்பெனி, போர் ஆயுதங்களுடன்; வந்து இந்தியாவையோ. உலகத்தின் எந்த நாடுகளையோ கைப்பற்ற வில்லை. வணிகத்தையே, ஒட்டு மொத்த உலகை மெல்லக் கொல்லும் ஆயுதமாக முன்னெடுத்து வந்தது. அப்புறமாக மாகத்தான் வடக்கு எல்லை அரசர், தெற்கு எல்லை அரசர் என்று உதைத்து இந்தியாவை தனது முழுக்கட்டுப் பாட்டிற்கு கொண்டு வந்தது. அதற்கு கிழக்கிந்தியக் கம்பெனி எடுத்துக் கொண்டது வெறுமனே ஐந்து பத்து ஆண்டுகள் இல்லை. ஆயிரம் ஆண்டுகள். 

ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக ஆட்சி நடத்தி மாண்டு போகும் காளாண்களாகத்தான் இந்தியாவில் ஒவ்வொரு கட்சியும் இருந்து வருகின்றன. அந்தக் கொஞ்ச காலத்தில் தங்களால் முடிந்த பங்குக்கு ஒவ்வொரு கட்சியும் ஏதோ ஒரு வகையில் இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக, கச்சத்தீவு மாதிரி மண்ணாக, உரிமைகளாக. வணிகமாக, உயரச்சிலை அமைக்கும் பெருமைகளாக, ஆயுதம் செய்து தரும் வலிமைகளாக விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. 

அந்த வகையாக ஆதிக்கப் பிடியில் இந்தியாவை வளைத்துப் பிடிப்பதில் முன்னணியில் இருப்பது சீனாவாக இருக்கிறது. இந்தியக் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் புட்டியிலிருந்து, இளைஞர்கள், இளைஞிகள் அடிப்படைத் தேவையாக இருக்கிற செல்பேசி தொட்டு, இன்றைக்கு உயரச்சிலை பெருமை வரை சீனா வளைத்துக் கொண்டுள்ளது.  

இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென அரசியல் சூழல் மாறியது. தலைமை அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கே பதிவியில் இருந்து இறக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டு முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சே தலைமை அமைச்சர் ஆனாதாகக் கூறப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில்தான், அதிரடியாக தலைமை அமைச்சர் மாற்றம் ஏற்பட்டு இருப்பது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்னணியில் சிறிசேனாவின் ஒத்துழைப்பிற்கு சீனா நெருக்குதல் கொடுத்ததாகவும், நடுவண் பாஜக சுப்பரமணிய சாமி மூலம் பச்;சைக் கொடி காட்டியதாகவும் அறியப் படுகிறது. 

இந்த நிலையிலும் உலகிலேயே உயரமான சிலையை, தமிழர் மொழிவிழியை குத்தி கீறி, சினக் கட்டுமானர்களை வைத்து, 'உலகிலேயே உயரமான சிலையை இந்தியாவிற்கு கட்டுமானம் செய்து கொடுத்த சீனா' என்ற பெருமையை வழங்கியிருக்கும் பாஜக நடுவண் அரசு விழித்துக் கொள்ளுமா? இந்தியாவைச் சீனச் சந்தைக்கு காவு கொடுக்குமா?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,958.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.