பாலியல் பலாத்கார வழக்குகளில், குற்றஞ் சாட்டப்பட்டுள்ள, சாமியார் ஆசாராம் மீதான வழக்கின் விசாரணை தாமதமாக நடப்பதற்கு, குஜராத் அரசுக்கு, உச்ச அறங்கூற்றுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய, சாமியார் ஆசாராம் மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது, ஆசிரமத்தில் தங்கியிருந்த பல பெண்கள், பாலியல் பலாத்கார புகாரை கூறியுள்ளனர். ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில், அவர் மீது பல வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக, 2013ல் கைது செய்யப்பட்ட ஆசாராம், சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பிணை வழங்கவும், உச்ச அறங்கூற்றுமன்றம் மறுத்துள்ளது. இந்நிலையில், ஆசாராமுக்கு சொந்தமான, குஜராத் ஆசிரமத்தில் தங்கியிருந்த, இரு சகோதரிகள், அவருக்கு எதிராக, பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கை, முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பாஜக அரசு அமைந்துள்ள, குஜராத்தின் சூரத் நகரில் உள்ள அறங்கூற்றுமன்றம்; விசாரிக்கிறது. இந்த வழக்கில், புகார் கொடுத்துள்ள சகோதரிகள் உட்பட, அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்த, ஏப்ரல் 12ல், உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு, அறங்கூற்றுவர்கள், என்.வி.ரமணா, அமிதவ ராய் அடங்கிய, உச்ச அறங்கூற்றுமன்ற அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில், சாட்சிகளிடம் இதுவரை விசாரணை நடத்தப்படாததற்கு, அமர்வு கண்டனம் தெரிவித்தது. விசாரணை நடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, குஜராத் அரசு அறிக்கை அளிக்க, அமர்வு உத்தரவிட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



