Show all

பன்றி காய்ச்சல் தாக்கி பாஜக சட்டமன்ற உறுப்பினர் மரணம்

ராஜாஸ்தான் மாநிலம் மண்டல்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

நாடு முழுவதும் வைரஸ், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பிரியங்கா காந்தி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாஜக முதல்வர் வசுந்தராராஜா சிந்தியா ஆளும் ராஜாஸ்தான் மாநிலத்தில் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தது தூய்மை இந்தியா என்று கோடிக் கணக்காண ரூபாய் செலவு செய்து வரும் பாஜக அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கர் தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கீர்த்தி குமாரி. இவருக்கு கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் இருந்துள்ளது. மருத்துவ சோதனைக்கு பின் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியானது.

இதையடுத்து 12 மருத்துவர்கள் கொண்ட குழு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனில்லாமல் இன்று காலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பாஜக மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.