சேலம் உள்பட சுற்றுப்பகுதி மாவட்டங்களில் இருந்து மேட்டூர் வரும் சுற்றுலா பயணிகள் அணை நீர்பரப்பு பகுதி, காவிரியாறு, கிழக்கு, மேற்கு கால்வாயில் நீராடுகின்றனர். இதில், நீச்சல் தெரியாத சுற்றுலா பயணிகள் விபரீதம் தெரியாமல் நீரில் இறங்குவதால் வௌ;ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழக்கின்றனர். இதில், அனைவருமே இளம் வயது ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மேட்டூர் அணை அடிவாரம் காவிரியாற்றில் விநாயகர் சிலை கரைக்க வந்த, சேலம், கொண்டாலம்பட்டி அடுத்த திம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த 12ம் வகுப்;;;;;;;;;;;;;;;பு மாணவர் வசந்தகுமார், 17, அதேபகுதியை சேர்ந்த வணிகவியல் இளவல் முதலாமாண்டு மாணவர் அவ்வை சண்முகராஜன், 19. நீரில் மூழ்கி பலியாயினர். கடந்த, 3அன்று சலகண்டபுரம், அண்ணாசிலை பகுதியை சேர்ந்த திருமணமாகி ஒரு ஆண்டே ஆன வாலிபர் பழனிசாமி, 21. அணை முனியப்பன் கோயில் அருகே காவிரியில் மூழ்கி உயிரிழந்தார். திருச்செங்கோடு அடுத்த கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ், 23, ஆகஸ்ட்,12அன்று மேட்டூர் அணை கோட்டையூர் நீர்பரப்பு பகுதியில் காவிரி வௌ;ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். திருச்செங்கோடு அடுத்த, தொண்டிகரடு கிராமத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி மணிகண்டன் 30, நீச்சல் தெரியாததால் ஆகஸ்ட், 13ல் மேட்டூர் அணை மூலக்காடு நீர்பரப்பு பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். சேலம், இரும்பாலை அடுத்த, மல்லப்பனூரை சேர்ந்த சுமைஊர;தி ஓட்டுநர் விஸ்வநாதன், 33, ஆகஸ்ட், 20ல் நண்பர்களுடன் சுற்றுலா வந்த அவர் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் குளித்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். கொளத்தூர் அடுத்த குரும்பனூரை சேர்ந்த வாலிபர் பரத்ராஜ், 22. நேற்று முன்தினம் நண்பர்களுடன் மேட்டூர் அணை பண்ணவாடி காவிரியாற்றில் குளித்த பரத்ராஜ் வௌ;ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். கடந்த, 22 நாட்களில் மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதி மற்றும் காவிரியாற்றில் மூழ்கி, எழு பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக நண்பர்கள் பட்டாளத்துடன் வரும் வாலிபர்கள் எல்லை மீறிய உற்சாகத்தில் ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்வதால், நீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழக்கின்றனர். இன்று மற்றும் நாளை, விநாயகர் சிலைகளை கரைக்க மேட்டூருக்கு நண்பர்களுடன் வரும் இளைஞர்கள் நீச்சல் தெரியாத நிலையிலும் காவிரியாற்றின் ஆழமாக பகுதிக்கு செல்ல ஆர்வம் காட்டுவது உண்டு. அவ்வாறு செல்லும் பட்சத்தில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விநாயகர் சிலை கரைக்க வரும் இளைஞர்கள், காவிரியாற்றில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



