பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் தாள்களை நாளை வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று நடுவண் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செல்லாத ரூபாய் தாள்களை டிசம்பர் 15-ஆம் தேதி வரை பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தலாம் என்று நடுவண் அரசு முதலில் அறிவிப்பு செய்திருந்தது. ஆனால் தற்போது பழைய 500 ரூபாய் தாள்களை நாளை வரை மட்டுமே பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தலாம் என்று நடுவண் அரசு இன்னுமொரு தடாலடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனிடையே வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2.07 காசுகள் உயந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் ரூபாய் தாள் திரும்பப் பெறுதல் முயற்சி சார்ந்த தடாலடி நடவடிக்கைகள், An idle mind is the devil’s workshop என்ற கதை தலைப்பைத் தான் நமக்கு நினைவு படுத்துகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



