பழைய சட்டத்தின் படி, திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும், திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கமும், வைத்திருக்கலாம். ஆண்கள் 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படமாட்டாது. அதுமட்டுமின்றி பரம்பரை நகைகள், பழைய தங்கக்கட்டிகளுக்கு வருமான வரி சட்டதிருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமான நகை வைத்திருந்தால் வழக்கமான வரிவிதிப்பு நடைமுறையே தொடரும். வருமான வரிச் சோதனையின்போது பிடிபடும் கூடுதல் தங்கத்திற்கு 60விழுக்காடு வரி விதிக்கப்படும. வருமான வரித் திருத்த மசோதாவில் நகைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என நடுவண் அரசு தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



