தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கவல்லாமல், வெய்யிலில் காய்ந்த சென்னையைக் குளிரூட்ட மட்டும் வந்த சிறு மழையால், சென்னை வாழ்மக்கள் மனம் குளிர்ந்திருக்கும் நிலையில், யாகம் நடத்தியதால் மழை வந்தது, என்ற தமிழிசையின் கண்டுபிடிப்பால் கடுப்பாகி இணையத்தை சூடேற்றி வருகிறார்கள் இணைய ஆர்வலர்கள். 08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க, வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக, மழை வேண்டி யாகம் நடத்த, முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் கோவில்களில் மழை வேண்டி அமைச்சர்களும், அதிமுகவினரும் யாகங்கள் நடத்தினார்கள். எறும்பு உட்கார யானை சரிந்த விழுந்த கதையாக, சென்னையில் நேற்று மழையும் பெய்தது. யாகம் நடத்தியதால் தான் மழைபெய்துள்ளது என்று தமிழிசை தமிழகம் முழுவதும் பறைசாற்றி வருகிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,192.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



