Show all

மாருதி சுசுகி பதிலடி! வாகன விற்பனை வீழ்ச்சிக்கான காரணமாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்த அறியாமை கருத்துக்கு.

நாட்டில் வாகன விற்பனை வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் நிறுவனங்கள் தான் காரணம் என இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ள பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு, மாருதி சுசுகி பதிலடி கொடுத்துள்ளது.

28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரலாறு காணாத வகையில் நாட்டில் வாகன விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. இந்த விற்பனைச் சரிவு தொடர் கதையாகி வருவது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் உள்நாட்டு வாகன நிறுவனங்கள் முதல் இந்தியாவில் கிளை பரப்பி செயல்பட்டு வரும் சர்வதேச நிறுவனங்கள் வரை விற்பனை வீழ்ச்சி மற்றும் பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருகின்றன.

இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள பாஜக அரசின்:- 
1.புதிய மாசு உமிழ்வு விதிகளை அமல்படுத்தியது, 
2.புதிய பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்தியது, 3.சரக்குசேவை வரி அமலாக்கம், 
4.மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கான கட்டமைப்பை வகுப்பதில் குளறுபடி, 
5.பெட்ரோல் டீசல் வாகனங்களை கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கை 
6.பணமதிப்பு நீக்கத்தால் வளரும் தொழில் வணிகங்களுக்கு தடையை உருவாக்கியது.
போன்றவை நாட்டில் நிலவும் வாகன விற்பனை வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணங்களாக சொல்லப்படுகின்றன. 

அண்மையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களின் வாகன புழகத்தின் காரணமாக இந்த மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தவணை செலுத்தி வாகனங்கள் வாங்குவதில் விருப்பம் காட்டாமல், பொதுவாகனங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்த கருத்து, நாட்டிலுள்ள முன்னணி வாகன நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாருதி சுசுகியின் இந்திய இயக்குநர் சசாங் சிறிவஸ்தா, இந்தியாவில் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் கால்பதித்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன.

கடந்த ஆண்டு இறுதி முதலே நாட்டின் வாகன விற்பனை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தற்போது தான் அது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் இந்தியாவில் அறிமுகமான போது, இளைஞர்கள், பெண்கள், படித்தவர்கள் என பல தரப்பினர் அதில் இணைந்து பணியாற்ற தொடங்கினர். அது, தற்போது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் நாட்டின் வாகன விற்பனை வளர்ச்சியை மட்டுமே சந்தித்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்தியாவின் வாகன விற்பனை வீழ்ச்சிக்கு நாட்டில் நிலவும் வாகன விற்பனை சரிவு தான் காரணம் என முழுமையாக கூறிவிட முடியாது. இந்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று மாருதி சுசுகியின் இந்திய இயக்குநர் சசாங் சிறிவஸ்தா தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,275.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.