Show all

எதிரும், புதிரும்! கவினை வெளியேற்ற முடியாத அளவுக்கு குவியும் வாக்குகள்- கேவலமாக விளையாடியதாக விழும்அடி

சிரிக்கிறார், காதலிக்கிறார், நண்பர்களுக்கு பிக்பாஸ் தலைப்பை விட்டுக் கொடுக்கப் போவதாக கதைக்கிறார், கழிப்பறைக்கு சென்று அழுகிறார், மக்களிடம் வாக்குகளை குவிக்கிறார், நண்பரிடம் கேவலமாக விளையாடியதாக அடி வாங்குகிறார். யாருப்பா இவரு? கவின் குறித்து மக்கள் மலைப்பு

28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இச்சூழலில், இந்தக் கிழமை முழுக்க, பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்து வருகின்றனர்.

தொடக்கத்தில், மலேசியாவை சேர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் முகேனின் தாய் மற்றும் தங்கை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருந்தனர். தொடர்ந்து, லாஸ்லியா, சேரன், வனிதா, தர்சன் மற்றும் செரின் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களை நலம் விசாரித்தனர்.

இச்சூழலில், போட்டியாளர் கவினை பார்க்க அவரது நண்பர் பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருந்தார். பிரதீப் ஆண்டனி கவின் மற்றும் சக போட்டியாளர்களிடம் பேசிவிட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து செல்லும் நேரத்தில், நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு. ஆனால், எனக்கு கடமை ஒன்னு பாக்கி இருக்கிறது, என்று கூறிக்கெண்டே கவின் முன்னால் சென்று நிற்கிறார்.

பின்பு கவினை பார்த்து, நீ கேவலமா ஆடுன விளையாட்டுக்கு, நீ மட்டமா ஒண்ணு பண்ணதுக்கு, உன்ன நம்புனவங்களை கைவிட்டதுக்கு, இங்க இருக்குறவங்களை காயப்படுத்தியதுக்கு, நான் ஒண்ணு செய்யலாம்னு இருக்கேன். பிக்பாஸ் தலைப்பை வென்று, நீ பெரிய ஆளா வந்துட்டனா  மேடைக்கு என்னை கூப்பிட்டு என்னை திருப்பி அடிச்சிக்கோ. அப்படி இல்லனா இந்த அடி தகுதியானதுதான், என்று சொல்லியபடியே கவினின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.

பிரதீப் ஆண்டனியின் இந்த செய்கையால் சக போட்டியாளர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். தன்னை அறைந்துவிட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் பிரதீப்பை கட்டி அணைக்கிறார் கவின். பிற போட்டியாளர்களை காண அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் வந்த நிலையில், கவினை பார்க்க அவரது நண்பர் மட்டும் வந்திருந்த வகையால் கவின் அவரது குடும்பத்தார் நிலையை தெரிந்து கொண்டிருப்பாரா? தெரிந்து கொண்டும் அதன் பொருட்டு கிச்சித்தும் கவலை கொள்ளாமல், நட்பு காதல் என்று கதைத்துக் கொண்டும் இருப்பது இணையத்தில் பல யூகங்களுக்கு வித்திட்டு வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,275.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.