நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மோடிக்கு பதிலாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை தலைமை அமைச்சர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மோடிக்கு பதிலாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை தலைமை அமைச்சர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. இதுவரை வெளியான கருத்து கணிப்புகள் அவ்வாறே நிறுவுகின்றன. இது பாஜகவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த நிலையில் பாஜக மாநில கட்சிகளின் உதவியை நாட வேண்டி இருக்கும். ஆனால் மாநில கட்சிகள் மோடியை மீண்டும் தலைமை அமைச்சராக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இதனால் பாஜக வேறு பாஜக தலைவர்கள் யாரையாவது தலைமைஅமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதன்படி பாஜக அமைச்சர் நிதின் கட்கரியை, தலைமை அமைச்சர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புள்ளது. இவர் ஆர்எஸ்எஸ் நபர் என்பதால், இவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. எனவே பாஜக கூட்டணி மோடிக்கு பதிலாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை தலைமை அமைச்சர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக கூட்டணியில் இருந்தாலும், மோடிக்கு கொஞ்சம் எதிரானவர். இதனால் இவரை சில மாநில கட்சிகள் ஏற்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,147.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.