நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பிலிருந்து நாடு முழுவதும் தொடரும் குளறுபடிகள். இதனடிப்படையில், தேர்தல்ஆணையம் மோடியின் கட்டுப்பாட்டில் என்று கசியும் தகவல்கள். இந்த நிலையில், 'யார் கையில் ஆட்சி' என்று தாங்கள் அறிவித்த முடிவுக்காக இன்னும் 14 நாட்கள் காத்திருக்க வேண்டும் மக்கள். 26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பீகாரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் டெம்போவில் பயணம் செய்கிறது. உ.பி.யில் உணவகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பதுக்கப்படுகிறது. சதீஸ்கரில் எந்த பித்தானை அழுத்தினாலும் ஓட்டு தாமரைக்கே வாக்கு விழுகிறது. குஜராத்தில் வாக்களிக்க வந்தவர்களை வாக்கு இயந்திரம் அருகே நிறுத்திவிட்டு ஒரே நபர் தொடர்ந்து பித்தானை அழுத்திக் கொண்டுள்ளார். இந்த மாயவித்தை விளையாட்டின் கதாபாத்திரம் தமிழ்நாட்டிலும் முகம் காட்டுகிறது. மதுரை தொகுதி வாக்குப் பதிவான மின்னனு இயந்திரங்கள் உள்ள அறைக்குள் சென்று இரண்டு மணி நேரம் இருந்து வந்தார் ஒரு வட்;;டாட்சியர். இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே தேனி தொகுதிக்குட்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்திற்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி 50 மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்து இறங்குகிறது. அரசியல் கட்சியினர் அவர்களாகவே எப்படியோ தகவல் தெரிந்து கேட்டால் அது சில சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்காக என்று பதில் கூறுகிறார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி. ஒவ்வொரு தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு அந்தந்த ஊரில் உள்ள கல்லூரி அல்லது அரசு கட்டிடங்களில் பாதுகாப்பாக அதுவும் மூன்றடுக்கு பாதுகாப்பாக உள்ளன என தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் எந்த தொகுதியிலும் வன்முறை வெடிக்கவில்லை. வாக்கு இயந்திரம் உடைக்கப்படவில்லை. எதிர்கட்சியோ அல்லது ஆளுங்கட்சியோ இந்த சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை யாரும் வைக்கவில்லை. வாக்கு இயந்திரத்தில் இருப்பது 'மக்கள் அதிகாரம்' ஆனால் அதை இன்னும் பதினான்கு நாட்கள் வரை இருட்டறைக்குள் வைத்து கையாள்வது அதிகார வர்க்கம் என்கிற மக்கள் தொடர்பற்ற 'அதிகார பீடம்' தான். அந்த அதிகார பீடம் மோடியின் கையில் என்பதாக அச்சம் பரவி வருகிறது. தேர்தல்ஆணையம் மோடியின் கட்டுப்பாட்டிலா! நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை; இன்னும் 14 யுகங்கள் காத்திருக்க வேண்டும். ஆம்.1நாள் என்பது 1யுகமாக கழிந்து கொண்டிருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,147.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.