பாஜக அமைச்சர் ஸ்மிருதி ராணி நாட்டு நடப்பு தெரிந்து கொள்ள முயலாமல், காங்கிரசை அசிங்கப் படுத்தும் நோக்கில் மக்களிடம் கேள்விகேட்டு அசிங்கப் பட்டு போனது இணைத்தில் தீயாகி வருகிறது. 26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மத்தியப்பிரதேசத்தில் நடந்த தேர்தல் கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா? என்று பாஜக அமைச்சர் ஸ்மிருதி ராணி கேட்க- மக்கள் ஒருமித்த குரலில், 'ஆம்' என்று கூறியதால் அவருக்கு வெட்கக்கேடாகப் போய்விட்டது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ், மக்களவை தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெற ஆர்வம் காட்டி வருகிறது. சட்டமன்ற தேர்தலில் விட்டதை நாடாளுமன்ற தேர்தலில் பிடிக்க வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக உழைத்து வருகிறது. தங்களிடம் உள்ள ஹிந்துத்துவா ஏவுகணை மூலம் பல தொகுதிகளை அறுவடை செய்ய பெண் சாமியார் சாத்வி பிரக்யாவை போபால் தொகுதியில் பாஜக களம் இறக்கியுள்ளது. குண்டு வெடிப்பு வழக்கில் ஜாமினில் இருக்கும் சாத்வி வேட்பாளராக நிறுத்தப்பட்டதை மோடியும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நியாயப்படுத்தினார். இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் நடந்த கருத்துப் பரப்புதல் பொதுக்கூட்டம் ஒன்றில் நடுவண் அமைச்சர் ஸ்மிருதி ராணி கலந்து கொண்டார். அப்போது, 'சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறினார். உங்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா?' என்று கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி கேட்டார். அதற்கு அனைவரும், 'ஆமாம், எங்கள் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது' என்று ஒருமித்த குரலில் கூறினர். இதனால், ஸ்மிருதி ராணிக்கு வெட்கக் கேடாகப் போய்விட்டது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,147.
சில நிமிடங்கள் தடுமாறிய அவர் பின்னர், தனது பேச்சை மாற்றிக் கொண்டு பேசத் தொடங்கினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



