01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகா சட்டமன்றத்திற்;கு தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் எண்ணப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா? பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி எகிறுகிறது. காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் சற்றேறக்குறைய சம பலத்துடன் முன்னேறி வருகின்றன. அதேநேரம் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் சத்தமில்லாமல் 40 தொகுதிகளுக்கு மேல் முன்னனியல் உள்ளது. இதனால் அரியாசனத்தை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளார் குமாரசாமி. இவரது கட்சியை தவிர்த்துவிட்டு யாராலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேவெ கவுடா மற்றும் குமாரசாமி கைகாட்டும் நபர்தான் முதல்வராக முடியும். மதச்சார்பற்ற ஜனதா தளம் இன்னும் கூடுதலான இடங்களை பெறும் பட்சத்தில், பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே குமாரசாமியிடம் அதிகாரப்பகிர்வு குறித்து பேசுவதற்கு வாய்புள்ளது. தொங்கு சட்டமன்றம் அமையும் நிலை ஏற்பட்டால் மாநிலக் கட்சியுடன் கைகோர்க்க தயார் என காங்கிரஸ் ஏற்கனவே கூறியுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சித்தராமய்யாவால் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர முடியாது. பாஜகவும் அதே ரீதியில் சிந்திக்கக் கூடும். ஏனென்றால் காங்கிரஸ் அல்லாத இந்தியா என்பதுதான் மோடியின் முழக்கம். எனவே காங்கிரஸை ஆட்சியில் அமர விடாமல் செய்ய மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோர்க்க பாஜக தயங்காது. அதேநேரம், ஆதரவு வேண்டும் என்றால் அதிகாரப்பகிர்வுக்கு தயாரா என்ற நிபந்தனையை குமாரசாமி முன்வைப்பார். அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஆதரவு என்ற நிலைப்பாட்டை குமாரசாமி எடுத்தால், பாஜக மற்றும் காங்கிரஸ் நிலைமை சற்றே சிக்கலில் தான் இருக்கும். எனவே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கிறார் குமாரசாமி.; அவர், தானே மன்னராக முடிவெடுத்து விட்டால் வேறு வழியில்லாமல் கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ் அல்லது பாஜக முன்வர வேண்டிய கட்டாயம் ஏற்படும். இரண்டரை ஆண்டுகளுக்கு அப்புறம் மீண்டும் ஆட்சி கலையும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,788.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



