Show all

தினகரன் அ.ம.மு.க., நிர்வாகி கைது! அதிமுக தொண்டர் குற்றச்சாட்டின் பேரில், முதல்வர் மீது அவதூறாம்

01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த, தேவனாம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ், அகவை29 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, தகவல் தொழில்நுட்பப் பிரிவில், திருச்செங்கோடு ஒன்றிய செயலராக உள்ளார். 

இவர், தமிழக முதல்வர் பழனிசாமி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் குறித்து, வாட்ஸ் ஆப், முகநூல்  மூலம், அவதூறு தகவல்களை பரப்பி வருகிறார் என்று களியனூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., கிளைச் செயலாளர் குமரேசன், அகவை 25 பள்ளிபாளையம் காவல்துறையில் புகார் செய்தார். அதன்; பொருட்டு தினேசைக் கைது செய்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,788. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.