01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வாக்குபதிவு எந்திர சித்து விளையாட்டா! எப்படி வெற்றியை ஈட்டியது பாஜக? என்று மீண்டும் வாக்கு பதிவு எந்திர தில்லுமுல்லு குறித்த ஐயம் கிளப்பப் பட்டுள்ளது. எடியுரப்பாவால் எப்படி தாங்கள் வெற்றி பெறுவோம் என்று அவ்வளவு உறுதியாகவும் தெளிவாகவும் இருக்க முடிந்தது. பாஜகவின் வெற்றி வாக்குப்பதிவு எந்திர சித்து விளையாட்டன்றி வேறில்லை. என்று அரசியல் நோக்கர்களில் ஒரு சாரர் ஐயம் கிளப்புகின்றனர். சாதியை அடிப்படையாக வைத்தே பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய மூன்று கட்சிகளும் தேர்தலைச் சந்தித்தன. அண்மையி;;ல் எடுக்கப்பட்ட சாதிவாரியான கணக்கெடுப்பில், 6 கோடிக்கு மேல் வாழும் கர்நாடகாவில் 19.5 விழுக்காட்டினர் பட்டியலின மக்கள், 16 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள், 14 விழுக்காட்டினர் லிங்காயத், 11 விழுக்காட்டினர் ஒக்கலிகர், குருபர் 8 விழுக்காட்டினர், 5 விழுக்காட்டினர் பழங்குடியினர் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையிலேயே வேட்பாளர்களை நிறுத்திய பாஜக, இந்தத் தேர்தலில் வெற்றி வாகையைச் சூடியுள்ளது. என்பதாக தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக வந்ததன் பின்னணியில், சாதியக் காரணங்கள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் மற்றொரு சாரர் நம்புகின்றனர். காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா? பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி எகிற, கர்நாடகா சட்டமன்றத்திற்;கு தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் எண்ணப்பட்டு வந்த நிலையில், பாஜகவின் வெற்றி ஐயத்தை கிளப்புவதாய் இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் பாஜக எதிர்ப்பு பேச்சுகளே காதில் ஒலித்த வண்ணமாய் இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் பாஜகவுக்கு ஆதரவாகவே பறை சட்டப் படுகின்றன. உண்மையாக இருக்கும் என்று ஒப்பக் கொள்ள மிகமிக தயக்கமாக இருக்கிறது. எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்று திரண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலிலாவது வாங்குப் பதிவு எந்திரத்தை அப்புறப் படுத்தா விட்டால் மோடியின் வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் தலைமை அமைச்சர் அவர்தான் என்று தீர்மானிக்கப் பட்டு விடும்; அப்புறம் மக்களின் பாடு அதோகதிதான். எதிர்கட்சிகள் நாடளுமன்றத் தேர்தலுக்குள் முழுமையாக விழித்தெழுவார்களா? என்பதே மக்கள் கேள்வி. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,788.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



