இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் புழக்கம் குறைந்து வருவது, மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை குறைப்பதாக இருக்கிறது. ஒரு முறை பணமதிப்பிழப்பால் மிகக்கடுமையாக அல்லல் பட்ட மக்கள்- 2000 ரூபாய் தாள் குறித்து, சூடுபட்ட பூனை போல பம்புகிறார்கள். 04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் புழக்கம் குறைந்து வருவது, மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை குறைப்பதாக இருக்கிறது. ஒரு முறை பணமதிப்பிழப்பால் மிகக்கடுமையாக அல்லல் பட்ட மக்கள்- சூடுபட்ட பூனை போல பம்புகிறார்கள். இந்த நிலையில், 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் மக்களின் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுமா என்ற கேள்விக்கு நடுவண் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக மக்களவையில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்களைப் புழக்கத்திலிருந்து நீக்கும் திட்டம் ஏதும் இல்லை. 2 ஆயிரம் ரூபாய் தாள்களுக்கு சில்லறை மாற்றும் சிரமம் இருப்பதாக மக்கள் கருதினர். அதனால் அதிகமான அளவுக்கு ரூ.200, ரூ.500 பணம்வழங்கும் இயந்திரத்தில் வைக்க வங்கி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக இந்தியன் வங்கி, இந்திய மாநில வங்கி அறிவிப்புகளை வெளியிட்டன. மற்ற வகையில் சந்தையில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருக்கும். இந்தியக்கட்டுப்பாட்டு வங்கியிடம் ஆலோசித்து, அரசு எடுக்கும் முடிவின் அடிப்படையில் மக்களின் புழக்கத்துக்கு ஏற்ப ரூபாய் தாள்கள் அச்சிடப்படுகின்றன. தற்போது வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், ரூ.7.40 லட்சம் கோடி புழக்கத்தில் இருக்கின்றன. 19,624.77 மில்லியன் 100 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் உள்ளன. இதன் மதிப்பு ரூ.1.96 லட்சம் கோடியாகும். 50 ரூபாய் தாள்;கள் 8,556.84 மில்லியன் தாள்கள் புழக்கத்தில் உள்ளன. இதன் மதிப்பு ரூ 42 ஆயிரத்து 784.20 கோடியாகும். ரூ.20 தாள்கள் ரூ.16,619.60 கோடியும், ரூ.10 தாள்கள் ரூ.30 ஆயிரத்து 510.79 கோடியும் புழக்கத்தில் உள்ளன” இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்தார். எது எப்படியிருந்தாலும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதைவேண்டுமானலும் செய்து மக்கள் மீது கொடுங்கோல் ஆட்சி நிகழ்த்துகிற பாஜக ஆட்சியில், மக்கள் பீதியில்தான் இருப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
இந்தியாவில் பலருக்கு ரூபாய் இரண்டாயிரம் என்பது ஒரு மாதச்சம்பளம். அது செல்லாமல் போனால் அம்மாடியோவ் என்று பணமதிப்பிழப்பை நினைவுக்கு கொண்டு வந்து சூடு பட்ட பூனையாக வேண்டாம் ரூபாய் இரண்டாயிரம் தாள்கள் என்று ஒதுங்குகிறார்கள் மக்கள். அதனாலேயே பலர் பணம் வழங்கும் இயந்திரங்களுக்குச் செல்லப்பயந்து, வங்கிகளில் பணம் எடுக்க கூட்டம் கூடியதாலேயே, வங்கிகள் பணம் வழங்கும் இயந்திரங்களில் 2000 ரூபாய் தாள்களை நிரப்புவதை நிறுத்தின என்று தெரிய வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



