கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளது 16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (29.03.20) நடக்கவிருந்த திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளது 16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (29.03.20) நடக்கவிருந்த திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் பொறுப்பு வகித்த பேராசிரியர் அன்பழகன் மறைவை அடுத்து திமுக பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திமுக பொதுக்குழு வரும் 16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (29.03.20) ஞாயிற்றுக்கிழமை காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடெங்கும் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்விகள், பல்கலைக்கழகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவிடப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள், வழிபாட்டுத்தளங்களில் கூடுவதை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து திமுகவும் தனது பொதுக்குழுவை ஒத்தி வைத்துள்ளது. நாளது 16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (29.03.20) நடக்க உள்ள பொதுக்குழுவை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



