27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் தொழிற்துறை பாதுகாப்புப் படை சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், 'உள்நாட்டில் உருவாகும் சதித் திட்டங்களுக்கு எல்லை கடந்து ஆதரவு கிடைக்கிறது. இத்தகைய கடினமான சூழல்களில் பயங்கரவாதத்தின் கோரமான முகம் வெளிப்படும்போது நாட்டின் பாதுகாப்பு மிகவும் சவாலாக அமைகிறது' என்று கூறியுள்ளார். பாஜக ஒரு இராணுவமாக எல்லையில் போய் போரிடுவதில்லை. எந்தவித வேறுபாடும் காட்டாமல் இந்தியாவின் அனைத்து மாநில மக்கள் தாம் போரில் நிற்கிறார்கள். புல்வாமா பாதிப்பிலும் இரண்டு தமிழர்கள் உயிர்ப் பலியானார்கள். விமானத்தாக்குதலிலும் அபிநந்தன் என்கிற தமிழன் தான் சாதித்தார். இதே போல் ஒவ்வொரு மாநிலத்தவரும் எந்தப் பாரபட்சமும் இல்லாமல் எல்லையிலே இந்தியப் பாதுகாப்பை உறுதி செய்கிறார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் செலவுகளில் மகுந்த பாதுகாப்போடு உலகைச் சுற்றி வரும் மோடி தன்னை அபிநந்தன் போல காட்ட முயல வேண்டாம். என்றைக்கும் இந்திய மக்கள் பிரிவினை உணர்வோடு அன்னிய தேசத்தை நாடுவதாகப் பேசுவதே மோடிக்கும் பாஜகவினருக்கும் வழக்கமாயிருக்கிறது. புல்வாமா தாக்குதலுக்கு ஒரு பக்கம் பாகிஸ்தானைக் காரணம் காட்டிக் கொண்டே, மறுபக்கம் காஷ்மிரிகளை பதினோரு மாநிலங்களில் தாக்கி உச்ச அறங்கூற்றுமன்றத்தினிடம் கொட்டு வாங்கியவர்கள்தான் இந்த பாஜகவினர். பாஜகவினர் பிரித்தாளும் சூழ்ச்சிகளை விடவே மாட்டார்கள் இந்திய மக்கள்தாம் அவர்களை இந்தத் தேர்தலில் களையெடுக்க வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,088.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.